பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சடகோபரும் அவர் அருளிச்செயல்களும் 281 மூன்று கவடாய் முளைத்தெழுந்த தன்மை போன்றதே, முத்தொழில் புரியும் மூர்த்திகளாக அது தோற்றி நிற்கும் நிலையாம், 'தானுஞ் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை' என்பது இவர் திருவாக்கு. தேவர் மக்கள் முதலிய சேதனர்களும், பிற அசேதனங்களும் அம்மூல வித்தின் பரிணாமமாக அமைந்தனவே. இவ்வுத்தம தத்துவத்தைக் கடைப்பிடித்து, அச் சேதனாசேதனங்கள் எல்லா வற்றினும் பரமான்ம சம்பத்தைக் கண்டு மகிழ்ந்தவர் இவ்வாழ்வார். ' அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண் டீசன் அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே ' (1-2-7) இங்ஙனம் மகிழ்வித்தவருக்குச் சமயவாதியர் நிகழ்த்தும் மதப் போராட்டங்களில் வெறுப்புண்டாதல் இயல்பன்றோ ? அவரவர் தகுதிக்கும் பக்குவத்துக்கும் ஏற்ப சமய பேதங்கள் அமைந்துள்ளன என்றும், அச் சமய தெய்வங்கள் யாவும் மூலப்பரம்பொருளின் திரு வுருவங்களே என்றும், அதனால் அவரவர் தத்தம் கடவுளரை வழிபடக் குறைவில்லை என்றும், அவ் வழி பாடுகள் யாவும் முடிவில் முதற் கடவுட் கே 'உரியவாம் என்றும் கூறுவர். இப்பெரியார், " அவரவர் தமதம அறிவறி வகை வகை அவரவ ரிறையவர் என அடி அடைவர்கள் அவரவ ரிறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விழிவழி யடைய நின் றவரே." (1 - 1--5) ( உணர்ந்துணர்ந் துரைத் துரைத்து அரியயனரன் என்னு மிவரை உணர்ந்துணர்ந் துரைத் துரைத் திறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே (1-3-6)