பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

282 ஆழ்வார்கள் காலநிலை தாமுணர்ந்து தெளிந்த பரம்பொருள் திருமாலே யாயினும், மேற்கூறிய தத்துவங்களின்படி, பரம் பொருள் எதனையும் கொள்வதில் இவ்வாழ்வார் வெறுப் புடையவர் அல்லர். தம் திருவாய்மொழி முடிவில், 'முனியே நான்முகனே முக்கண்ணப்பா' என்று அப் பரமனை விளித்தும், அரியை அயனை அரனை அரற்றி' வீடு பெற்றதாகத் தம்மைக் கூறியும் போந்த இவர் பாசுரங்கள் மேற்கூறிய கருத்தையே குறிக்கின்றன. உய்யக்கண்ட உத்தம நெறி சீவான்மா தன் மாயா பந்தங்களை அகற்றிப் பரமான்மாவை அடைதற்குத் தம் ஞான விசேடத்தால் ஆழ்வார் தெளிந்த உத்தம நெறி பிரபத்தி' என்ற மார்க்கமாகும். அஃதாவது-இருவகைப் பற்றுமற்று, ஈசன் அருளையே இடையறாது நினைந்து, தனக்கொரு பாரமுமின்றி அவன் ஒருவனையே சரணமடைதலாம். கண்ணபிரான் அருச்சுனற்குக் கீதை முடிவில் அருளி யதும் இந்நெறியே, நேர்மையும், எளிமையும்,யாவர்க்கும் உரியதுமான முக்தி வழி இதுவே என்றும், பரம் ஞானிகட்கும் இது வேண்டத்தக்கது என்றும் ஆழ்வார் தெளிய அருளிச் செய்வர். (திருவாய்-4-1-10, 3-10-6) ஈசனிடம் ஈடுபாடு இனி தாமுகந்த பரம்பொருளான திருமால் காத்தற் றொழிலை மேற்கொண்டு உலகோர்க்கு' அருள் புரிந்த வரலாறுகள் ஆழ்வார் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன. அப்பகவானது அவதார விசேடங்களிலும், திருக்கோயில் இருப்புக்களிலும் ஈடுபட்டு முக்திபெற்ற பக்திமான்கள் எண்ணிறந்தவர் அன்றோ? இவரெல்லாம்