பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

284 - ஆழ்வார்கள் காலநிலை

  • வாரிக் கொண்டுன்னை விழுங்குவன் காணின் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் காரொக்குங் காட்கரை யப்பன் கடியனே' (9-6-10)

முதலியவை காண்க, இத்தகைய பேற்றுக்குத் தானாகவே பெருமான் புரிந்த கருணையன்றி, வேறு காரணமில்லை யென்பர், ஆழ்வார். ' இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை யென்னுள் வைத்தான் எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே" (6-8-9) பரமனை யடையும் பெரும்பேறு அவனருளால் கைகூடுவதேயன்றிக் கேவலம் ஆன்மாவின் முயற்சி யால் அடையக் கூடிய , தன்று என்பதே இவர் திருவுள்ளம். ஒரே துவு மின்றிப் பொழியும் ஈசனது கருணா வருஷம் பாழ்போகாமல் தேங்கிப் பயன் விளைவிப்பதற்கு உரிய நிலைக்களமாகத் தன்னை ஆக்கிக் கொள்ளும் அளவே, ஆன்மா செய்யக் கூடிய தாகும், இதற்குச் சிறந்ததோர் உவமையை, "வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இதுவல்லால் மாரியார் பெய்கிற்பார் மற்று' (2 ஆம் திருவந்தாதி- 16) என்ற முன்னோர் திருவாக்கிற் காணலாம், இம்முறையில் பரமனருளை நோக்கிப் பிரபத்தி செய்து போந்த நம் ஆழ்வாருக்கு, அவன் அருள் மட்டு மன்றி, இவருடன் அப்பரமனே கலந்து இணைந்து ஒன்றாகும் அதிசய நிலைமையும் வாய்த்தது. தன் பேறாகவே இவருடன் பகவான் இணைந்த நிலையில் இவர் அருரிச் செய்த பாசுரங்கள் அருமை பெருமை வாய்ந்