பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சடகோபரும் அவர் அருளிச்செயல்களும் 285 தவை. அது நீ ஆகிறாய்' என்பதன்றி, 'அவன் நான் ஆகிறான்' என்பதே இவர் கொள்கை, “தானே இன்னருள் செய்து என்னை முற்றவுந் தானானான்" (4-1-10) "தானே எம்பெருமான் அவள் என்னாகி யொழிந்தான்" (5-1-2) யானுந் தானா யொழிந்தாளை" (8-8-4, என்பன முதலிய காண்க. ஆழ்வாரும் கவிஞர்களும் ஆழ்வார் தாம் அருளிய திருவாய் மொழியைத் தாமே பாடிய பிரபந்தமாகக் கூறவுந் துணிந்திலர்', பகவானே தம் வாக்கில் நின்று கொண்டு தன்னைத் தானே பாடிய இருந்தமிழ் நூல்' ஆக அதனைக் கூறுகின்றார். (10-6-4) சீர்கண்டு கொண்டு திருந்துநல் லின்கவி நேர்பட யான்சொலு நீர்மை இலாமையின் ஏர்விலா என்னைத் தன்னாக்கி யென்னால் தன்னைப் பார்பரவு இன்கவி பாடும் பரமரே' (7-7-5) என்று தன் ஆற்றலின்மையை இதற்குக் காரணமாக இவர் கூறுதல் காணலாம். இங்ஙனம் எதிர்பாராத இறையருள் தமக்கு வாய்த்தது போலவே இன்கவி பாடும் பரம கவிகளாகத் தம் காலத்து விளங்கும் புலவர் களிடமும் அவ்வருள் வெள்ளம் பாயத் தடையில்லை என்பதே இவர் கருத்து. ஆகவே, அப்புலவர் குழாத்தை நோக்கி செஞ்சொற் கவிகாள் உயிர்காத்தாட் செய்ம்மின் (10-7-1) என்று கூவி அழைத்துத் தாம் பெற்ற பேற்றை அவர்க்