பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சடகோபரும் அவர் அருளிச்செயல்களும் 287 இவ்வாழ்வார் பாசுரங்கள் பலவும் அமைந்திருத்தல் யாவரும் அறிந்ததே சீவான்மாவுக்கும் பரமான்மாவுக்கும் உள்ள தொடர்பு பலவகையில் உத்தம நாயக நாயகியர்க்கு உள்ளவற்றோடு ஒற்றுமை யுடையது. அத்தகைய பகவத் விஷயத்தில் தம் காமத்தை ஈடுபடுத்துவது பரமனோடு ஐக்கியப் படுத்துவதே என்பதும் வீடுபேறும் அதுவே என்பதும் முன்னோர் திருவுள்ளம். ' சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற் காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே ஆமது ராமம்; அறம் பொருள் வீடிதற் கென்றுரைத்தாள் வாமனன் சீலன் இராமா நுசனிந்த மண் மிசையே' (இராமாநுச நூற்றந்தாதி) ஈசுவர சாம்ராஜ்யமும் ஆழ்வாரும் இனி, பரம்பொருளான திருமாலை ஒரு சாம்ராஜ்யம் ஆளும் சக்கரவர்த்தி ஆகவே கொண்டு ஆழ்வார் கூறும் அரிய செய்தி ஒன்றும் இங்கே குறிப்பிடத் தகும், இவ்வாட்சிச் சிறப்பை“வீற்றிருந் தேழுல குந்தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல்மிக் காளும் அம்மானை” {4-5-1) “இன்பம் பயக்க எழில்மலர் மாதருந் தானுமிவ் வேழுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்தாள்கின்ற எங்கள் பிரான்” (7-10--1) என்ற இவர் திருவாக்குக்களிற் காணலாம், பரமான்மாவின் ஆட்சிக்குரிய பேரிடங்கள், இக லோகம் பரலோகம் என்ற இரண்டும் ஆகும், பரலோகத் தவரான நித்திய முத்தர்களும் அஃதல்லாத உலகங்