பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 ஆழ்வார்கள் காலநிலை இவர்களுள் சைனர்கள், தமிழ் மொழியிற் செய்த இலக்கிய இலக்கண நூல்களும் சமயசாத்திரங்களும் பிறவும் பலவென்பதும், அவற்றிற் சில, அவர்க்குப் புறம்பான சமயத்தாரும் பாராட்டும்படி இன்றுவரை நின்று நிலவுதலும் யாவரும் தெரிந்தனவாம்.! சைன ரும் பௌத்தரும் தருக்கசாத்திரத்தில் மிக்க பயிற்சி யுடையராயிருந்தமையின், ஏனைச் சமயிகளை வாதப் போருக்கிழுத்துத் தங்கள் ஆற்றலைக் காட்டிவந்தனர். << போதியார் பிண்டியா ரென்றவப் பொய்யர்கள் வாதினா லுரையவை (தேவா. பக். 376, பாட். 10. சுவாமிநா. பதிப்பு.) “ தடுக்கமருஞ் சமணரொடு தருக்கசாத் திரத்தவர்சொல் இடுக்கண் வருமொழி (ஷை, 822, 10.) ‘ தருக்கினாற் சமண்செய்து' (பெரிய திருமொழி. 6, 1, 7.) * தற்கச் சமணருஞ் சாக்கியப் பேய்களும்" (திவ். இராமாநுச நூற். 98) என்று வைதிகசமயமுன்னோர் இவரது தருக்கவாற்றலை சிறப்பாகக் குறிப்பிடுதல் காணலாம். 1. "முன்னோ ரொழியப் பினமனா பலரினுள, எந்நூ லாரும் நன்னூலாருக், கிணையோ வென்னுந் துணிவே மன்னுக” எனச் சுவாமிநாத தேசிகரும் (இலக். கொத். 8, உரை) பல்கலைக் குருசில் பவணந்தியென்னும், புலவர் பெருமான் புகழ்போல விளங்கி நிற்றலான்” எனச் சங்கர நமச்சிவாயப் புலவரும் (நன், 137 உரை.) கூறுதல் காண்க.