பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

292 ஆழ்வார்கள் கால நிலை திருவாய்மொழி முதற்பத்து 5-ஆம் திருப்பதிகத் திலே, முதலிரண்டுபாசுரங்களின் அந்தமும் ஆதியு மாகத் தங்கள் காலத்து வழங்கிய நினைந்துநைந்தே" நினைந்துநைந்து' என்ற பாடங்களோடு, 'இனைந்து, நைந்தே' இனைந்துநைந்து' என்ற பக்ஷாந்தர பாடங் களையும் பன்னீராயிரப்படி குறிப்பிட்டிருத்தலும், திருமாலை 45-ஆம் பாசுரத்தில் கவளமால்யானை" என்ற பாடத்தோடு, 'களவமால்யானை' என்ற பக்ஷாந்தர பாடத்தையும் குறித்திருத்தலும் காண்க: இவற்றால், அத்யாபகர்களின் பாடபேதங்கள், வியாக்யான பாடங்கள், அவ்வியாக்யானங்களிற் கண்ட பக்ஷாந்தரபாடங்கள் என முக்கியமாக மூன்று வகைப் பாடங்கள் இப்போது அறியப்படுகின்றன. வேறு வகையும் இருக்கலாம். இவற்றுள் எதனையும் பற்றி எழுத யான் முன்வரவில்லை. இவற்றின் வேறான நான் காம் வகை ஒன்றையே இங்குக் குறிப்பிட விரும்புகின் றேன். ஆழ்வார்கள் திவ்யப்பிரபந்தங்கள் யாவும் தமிழ் நன்னூற்றுறைகள் ஐந்துக்கும் இலக்கியமாக விளங்கு. வன என்பதே முன்னோர் முடிபு. சொற்பொருள் மரபுக ளாலும் வழக்கு வரலாறுகளாலும் தமிழ் வரம்பை அவை சிறிதும் கடந்தனவல்ல, இவற்றிற் குறைபாடு காணப் படுமாயின், அங்கே ஏதோ திருத்தமேனும் பாடபேத மேனும் உண்டு என்றே சொல்லலாம். இதனை நன்குணர்ந்து, தமிழ் முன்னூல்களோடு ஒப்பிட்டு நோக்குவோமானால், அருளிச் செயல்களிலே பொருட்சிறப்புள்ள பழம் பாடங்கள் பல நமக்கு விளங் கக்கூடியன. பழைய சாஸனங்களும் இவ்வாராய்ச்சிக்கு