பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 293 "ஓரளவு துணையாகும். திவ்யப்ரபந்த வியாக்யாதாக் களும் இம்முறையை அறிந்தவர்களே;ஆயினும், அவர்க் கும் முன்பிருந்தோர் பலரும் வழக்கமாய் ஓதிவந்த பாடங்களை மதித்துத் தழுவியும், அவற்றுக்கு அர்த்த ரஸங்களை யூட்டுவதில் அதிக நோக்கங்கொண்டும் அவர்கள் உரையிட்டார்கள். மேலே காட்டிய திருவாய்மொழி திருமாலை வியாக் யானங்களின் பக்ஷாந்தர பாடங்களே இதற்குச் சான்று களாகும். அப்பாடங்கள், மோனை எதுகை நயங்களும் பொருளிற் குறைவில்லாமையும் உடையவாயினும், தலைமைப் பாடங்களாக அவற்றை வியாக்யாதாக்கள் கொள்ளாமைக்கு இதுவே காரணமாகவேண்டும். இவ்வாறு, முன்னோர் ஓதிவந்த பாடங்களைப் பொன்னே போற் போற்றி அதற்கு உரையிட்டு வந்த தனால், ஏனைய பாடங்களின் ஆராய்ச்சியில் அவர்கள் அதிகமாக ஈடுபடவில்லை. எனினும், பழந்தமிழ் நூல் களும் சாஸனங்களும் பல்கிவரும் இக்காலத்தே சொற் சுவை பொருட்சுவைகளாலும், வழக்கு வரலாறுகளாலும் சிறந்து காணப்படும் பாடங்கள் ஆராய்ச்சி முறையில் அறியப்படுமாயின், முன்னோர் பாடங்களுடன் மாறு பட்டன என்ற காரணத்தால் அவற்றை அடியோடு ஒதுக்கி விடுதல் சிறிதும் உற்றதன்று, அதனால், அவ் வாராய்ச்சி முறையில் நான் கண்டவற்றை இங்கெழுது கின்றேன்; பேரறிஞர்கள் ஏற்புடையன கொள்க. 1. பெரியாழ்வார்திருமொழி முதற்பத்துள்:" வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர் கண்ணன் கேசவ நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ண மெதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றங் கலந்தள றாயிற்றே"