பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

296 ஆழ்வார்கள் காலநிலை ' உடைதிரை முத்தஞ் சிந்த ஓசனிக்கின்ற அன்னம் (சீவக. 2652) என்ற முன்னூற்றொடர்களின் பழைய உரைகளை நோக்குக. ஆகவே காற்று ஆட்டுதலால் நீலமலர்கள் தலையெடுத்து நிமிரும், (அன்றி) இடம்விட்டுப் பெயர முயலும் என்ற பொருளில் நீலம் காற்றாட்ட ஒசனிக்கும்' கான்று ஆதியில் அமைந்திருந்த தொடரே, பின்பு ஓசலிக்கும் என்று எழுத்துமாற்றம் அடைந்ததாக வேண்டும், ஒருசொல்லாய்ப் பொருளாலும் குறைவற்று நிற்கும் இப்பாடமே, இருசொற்காளக்கி ஒன்றை இடைச்சொல்லாகக் கொள்ளும் பாடத்தினும் சீரியது என்னத் தட்டில்லை. 3. க்ஷ மூன்றாம்பத்து 7-ம் திருமொழி நாடுமூரும் அறியவே போய்' என்ற 5-ஆம் பாசுரத்தில், கேசவனோ டிவளைப், பாடுகாவலிடுமின் என்று பார்தடு மாறினதே " என்பது முன்னோர்பாடம். இதற்கு-'கேசவனோடு இவளைப் (பாடு-) பக்கத்தில் காவலில் வையுங்கள்' என்று பொருள் கூறப்பட்டுள்ளது. ஆனால் இங்கே கொள்ளத்தகுந்த பழம்பாடம் ‘பாடிகாவ லிடுமின்' என்பதாம். பாடிகாவல் சிறைக்காவல், ஊர்த் தலையாரிகளின் காவல். 'பாடிகாவலிற் பட்டுக்கழிதிரே" “பாடிகாவலிற் பட்டுக்கழியுமே” (தேவா) ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவலிட்டாங்கு" (சிவஞானபோதம், 2 அதி)