பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 299நாளம்- தண்டு (கம்பரா. மிதிலைக். 75), தாள தாமரை' என்ப (திருவாய்). 6. திருப்பாவை, 4-ஆம் பாசுரத்தில், “ஆழிமழைக்கண்ணா வொன்றுநீ கைகரவேல் என்பது, இப்போது வழங்கும்பாடம். மழைக்கண்ணா என்பதற்கு 'வர்ஷத்துக்கு நிர்வாஹகனே!' என்று பொருளும் “அவயவங்களுள் கண் பிரதானமா யிருப்பதுபோல், பர்ஜன்யன் மழைக்குப் பிரதானன் என்பதுபற்றிக் கண்ணா ' என்கிறது" என்று குறிப்பும். வியாக்யானங்களிற் காணப்படுகின்றன. கண்ணன் என்ற சொல் நிர்வாஹகன் என்ற பொருளில் நேரே வழங்குவதன்று என்பது, மேற்கூறிய குறிப்பாலே' பெறப்படும். குறிப்பிற்பெறும் பொருளிலும், ஒரு சிறு வளைவுக்கீற்றால் நேர்பொருள் அமையுமாயின், அப், பாடம் சிறந்ததாகுமன்றோ ? அஃதாவது: “ஆழிமழைக் கண்ணா லொன்றுநீ கைகரவேல் என்பதாம். மழைக்கு அண்ணால் -மழைக்கு ஸ்வாமியே, நிர்வாஹகனே! என்றவாறு. லகர வகரங்கள் ஏட்டெழுத்துக்களில் மாறு பட்டு வழங்குவதற்கு, எத்தனையோ உ.தாரணங்கள் காட்டலாம். 'நலங்களாய, நற்கலைகள் நாவிலும் நவின்றிலேன்” (திருச்சந்த, 90), என்று, வியாக்யானத்துக் கேற்ப அமைந்துள்ள பாடத்துக்கு; லகர வகரங்களின் எழுத்தொற்றுமை யால், நாலிலும் நவின் றிலேன்' என்று பாடாந்தரம். வழங்குதல் காண்க; - மக்கட் கிரை' வேந்தர்க்கொளி என்பனபோல மழைக்கண்ணால்' என வந்தது. 7. ஷ, 16-வது, நாயகனாய்நின்ற என்ற பாசுரத்தில்--- தூயோமாய் வந்தோம் துயிலெழபாடுவான்