பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 301 தலை, சந்தரமூர்த்திநாயனாரது திருப்புனவாயில் தேவாரப்பு பதிகம் முழுதும் - மனமே ! என்னொடு சூளறும்' என்றாற் போலும் தொடர்கள் பயிலுதலால் நன்கறியலாம். இனி, "மணவாட்டிமாரொடு சூளுறும் என்ற பாடமும் வழங்குகின்றது. இச்சூளறும் என்பதற்கும் ஆணையிடல் என்பதே பொருளாம். சிந்தாமணியில்சீவகனது பவனியைக் காணவேண்டி, விரைந்து செல்லும் அவனது ஊர்தியான பிடியை நிற்குமாறு, கூறும் பெண்டிர்கூற்றில்-- "சிறுபிடி! கேள்வன் அயிராவணத்தொடு சூளுறும் (2126) என்று இவ்வாணைச்சொல் வழங்குதல் இங்கே ஒப்பிடத் தக்கது. இதற்கு-நச்சினார்க்கினியர், "சிறுபிடி! நின் கேள்வனாகிய அயிராவணத்தோடு சூளுறுவோம் என்று. பொருளும், “சூளுறும் என்பது சேறும்' என்றாற்போலப் பன்மையுரைக்கும் தன்மைச் சொல்” என்று குறிப்பும் எழுதுகின்றார். இப்பொருளுங் குறிப்பும் ஆண்டாள் திருவாக்குக்கும் பெரிதும் ஏற்பனவே. ஆனால், முற். கூறிய தேவாரத் தொடரான சூளறும்' என்பது முன் னிலை யொருமையினும் வழங்குதல் காணலாம். இதனால் சூளறும், சூளுறும் என்ற இருவகையும் ஒருபொருளில் வழங்குவதே என்பதும், சூழறும்' என்ற பாடம் திருத்தத் தக்கது என்பதும் அறியலாம். 9. யாப்பருங்கலவிருத்தி என்ற செய்யுளிலக்கண 'நூலுரையுள், பொய்கையாழ்வார் அருளிய முதற்றிரு. வந்தாதியில் உள்ள “எளிதிலிரண்ட டியும் (51) பாலன் றனதுருவாய்' {69)