பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 303 4 நெறியார் குழற்கற்றை முன்னின்று பின் தாழ்ந் தறியா திளங்கிரியென் றெண்ணிப்- பிறியாது பூங்கொடிகள் வைகும் பொருபுனற் குன்றென்னும் வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு "வழியிடையே அசையாது இருந்துகொண்டு தியா னிக்கும்' ஆசிருதர்களுடைய, முன்புறத்திலிருந்து பின் புறமாகத் தாழ்ந்துள்ள கூந்தற்றொகுதியை, அறியாதே சிறுமலை யென்று எண்ணி, பூக்களையுடைய கொடிகள் தங்குகிற...பொரும் புனலையுடைய குன்றான திருவேங் கடமே நாம் விரும்பும் மலை என்ற கருத்தில் இப் பாடற்குப், பழைய வியாக்யானம் அமைந்துளது. இங்கு, 'நெறியார்' என்பதற்கு ‘ஸ்தாவரப் பிரதிஷ்டரா யிருந்து தியானிக்கிறவர்கள்' என்றும், குழற்கற்றை' என்பதற்குக் கூந்தற்றொகுதி' என்றும் பொருள் கொள் 'ளப்பட்டமை தெரியலாம். இதனால் தம் காலத்தில் முன் னோர் ஓதிவந்த பாடத்துக்கு அமைந்ததொரு பொருளை வியாக்யாக்யாதாக்கள் விளக்கியுள்ளார்கள் என்றே கொள்ளவேண்டும். ஆயினும், குழற்றொகுதியை இளங்கிரி என்று எண்ணிப் பூங்கொடி கள் அதன்மேற் படர்ந்து தங்கு வன என்ற கருத்தில், அக் குழற்கும் கிரிக்கும் ஒப்புமை நன்கு அமையாததோடு, இளங்கிரி என்ற இளமை விசேடணம், ஏற்புடையதாகவும் தோன்றவில்லை. அதனால், பழையபாடம் வேறாயிருந்து 'பின்பு மாறிய தாகவே தோற்றுகின்றது. அப்பாடம், “நெறியார் குழக்களிற்றை முன்னின்று பின்தாழ்க் தறியா திளங்கிரி றயன்பெண்ணிப்-பிறியாது பூங்கொடிகள் வைகும் பொருபுனற் குன்றென்னும் வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு”