பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

304 ஆழ்வார்கள் காலநிலை . என்றிருந்ததாதல் வேண்டும். இதன்படி நேரக்கு, மிடத்து, முன் புறம் உயர்ந்தும் பின்புறம் தாழ்ந்தும் வழியிைட்யே தங்கிக் கிடக்கும் இளங்களிற்றியானையை, அறியாமல் சிறிய குன்று என்று நெருங்கியப் பூங்கொடிகள் அதன் மேலே தங்கும்................ வேங்' சடம்' என்பது பொருளாகும். இளங்கிரி என்று கருதற்குக் குழக்களிறு ஏற்றதாதலும், அதனைத் திரண்டுயர்ந்த பாறையான துறுகல் என்று நெருங்கிப் பூங்கொடிகள் படர்தல் இயற்கையாதலும் காண்க.. இதுவே, பொருட்பொருத்தமுள்ள பழம்பாடமாதல் வேண்டும் என்பது சங்க நூலான குறுந்தொகையுள் (36) "துறுகல் அயலது மாணை மாக்கொடி! துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்" என்னும் சான்றோர் கூற்றாற் பெறப்படும். ஈண்டு, மாணைமாக்கொடி' என்பதனோடு (திருவந்தாதியிலே) 'பூங்கொடி' என்பதும், 'துஞ்சுகளிறு' என்பதனோடு 'நெறியார் குழக்களிறு' என்பதும், அயலது மாணை மாக்கொடி இவரும்' என்பதனோடு, 'பூங்கொடிகள் வைகும்' என்பதும் பெரிதும் ஒப்புமைபெற்றிருத்தல் நோக்கத்தக்கது. துறுகல், யானைபோலத் தோன்றும் என்ப ர். மாசறக் கழி இய யானை போலப் பெரும்பெய லுழந்த இரும்பிணர்த் துறுகல்” (குறுந். 13) 1. 'துறுகற்பக்கத்துள்ள மாணை என்ற பெருங்கொடி, யானது அங்கே கிடந்துறங்கும் களிற்றின் மேல் வேற்றுமை. தெரியாது படரும் குன்றஞ்சூழ்ந்த நாடன்' என்பது இதன் பொருள். மூங்கில்களைப் பிணைத்துத் தெப்பம் கட்டுவதற்கு, உறுதியானது இம்மாணைக்கொடி என்பது கம்பர் வாக்கால் தெரிகின்றது (இராமா. வனம்புகு. 36).