பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 305 “புகர்முக வேழம், இரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத் தழூஉம்” (ஐங்குறு. 239) இவற்றால், குழக்களிற்றை என்பது 'குழற்கற்றை என்றும், மோனைக்கியைய அண்ணிப் பிரியாது என்றிருக்க வேண்டியது ‘எண்ணிப் பிரியாது' என்றும் மாறின என்பது தெரியலாம். குழக்களிறு-இளங்களிறு. 'குழக் கன்று என்பதுபோல (மூன்றாந்திரு. 7); நீலகேசி, 402)' 'குலக்களிற்றை' என்பது குழக்கற்றை எனத்திரிந்த தெனினும் பொருந்தும். ஏட்டெழுத்துக்களில் லகரழகர வேறுபாடில்லாமல் இருத்தலும், அவ்விடங்களில் பொருட்பொருத்தம் பெறச் சில எழுத்துக்களைக் கூட்டி யும்குறைத்தும் வழங்குதலும் முன்னூல்களிலும் காண லாம். உதாரணமாக-திவாகரம் பிங்கலந்தை நிகண்டு களில் வராகக்கொடிவேள் புலவரசர்க்கு(சளுக்கரசர்க்கு ) உரியது' என்ற பொருளில் அமைந்த 'கேழல் வேள்புல வரசர் கொடியே' என்ற சூத்திரப்பாவைக், கேழல்வேழம்புலவர் கொடியே" என்று படித்துக்கொண்டு, அதற்கேற்ப, பன்றியும், யானையும் புலவர் கொடி, என்ற பொருளிற் பாடிவிட்ட பின்னோரும் உண்டு.. 11. மூன்றாந்திருவந்தாதி 12-ஆம் பாசுரத்தில் - - மறையென்றும் நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும் பைங்கோத வண்ணன் படி 1. பிடிசெத்து - பிடியாகக்கருதி. 2. ஆராய்ச்சித்தொகுதி பக். 477.8 காண்க.