பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 309 அவற்றுடன் இயையாதது இம்முதற்சீர்ப்பாடம் என்றும், அதனால், கேழ்த்த வடி' என்பதில், வகரத்தை உடம்படுமெய்யாக்கிப் பிரித்தமுறை பொருந்தா தென்றும் எளிதில் அறியலாம். ஆகவே, "வடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன் என்பதே ஏற்பதென்க. வடி-தேன். ‘வடியுறுமலர்' (சூளாமணி. இரதநூ. 45) 'வடிகொள்பொழிலின்' (தேவா. பக். 116. 3) என்ற பிரயோகங்கள் காண்க. பெரியவாச்சான்பிள்ளை வியாக்யானத்தில் அடி-தாள் என்ற பொருள் காணப் படாமையும்நோக்கத் தக்கது. 15. திருமழிசைப்பிரான் அருளிய நான்முகன் திரு வந்தாதியில்“ பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும் ஈட்டிய தீயும் இருவிசும்பும்-கேட்ட * மனுவுஞ் சுருதி மறைநான்கும் மாயன் தனமா யையிற்பட்ட தற்பு என்பது 76-ஆம் பாசுரம். இதனுள், பாட்டும் முறையும்' என்று ஓதப்படும் பாடத்துக்கு-- பாசுரங்களும் இராமாயணமும்' என்றும், 'இயலும் இசையும்' என்றும் பலபொருள் கூறுவர். பெரியவாச்சான் பிள்ளை வியாக் யானத்தில்- “இப்படிப் புராணங்களிற் பரக்கச் சொல்லப்பட்ட அர்த்தங்கள்" என்று முதலடிக்குப் பொருள் அமைந்துளது. இதன்படி நோக்குமிடத்து, "பாட்டுமுறையுமாய் அமைந்த புராணங்களிற் சொல்லப் பட்ட பலவகைப்பொருள்களும்' என்ற பொழிப்புடைய பாட்டு முறையும் படுகதையிற் பல்பொருளும்