பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 313 மூன்று' என்பதும், நடுவண தெய்தின்' என்பதனோடு இடையதனை எய்துவார்' என்பதும், இருதலையும் எய்துவர்' என்பதும்- சொல்லாலும் பொருளாலும் பெரிதும் ஒப்புமை பெற்றிருத்தல் அறியலாம். இக்கருத்தையே“அறனீனும் இன்பமும் மீனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்" (குறள்.) என்று வள்ளுவனாரும கூறினார். இவ்வாறு, முன்னூற், கருத்தோடு பெரிதும் ஒப்புமைகொண்ட பாடமே, இருந்தமிழ் நூற்புலவரான ஆழ்வார்க்குந் திருவுள்ள மானது என்று தமிழறிஞர்கள் கருதக் கூடியதேயாகும். ஆயின், காமத்தையே சிறப்பிக்கப்புக்க திருமங்கை மன்னன், அறமும் இன்பமும் பொருளால் அடையக் கூடியவை என்று ஈண்டுக் கூறியதென்னை? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு 'ஐஹிகமான புருஷார்த்தங்களுள் ஒன்றாகிய இன்பம்' 'என்பது, விஷயாந்தரகாமம் அல்லது சிற்றின்பமாகும். அஃது இடையிலுள்ள பொருளால் அடையக்கூடியதே. ஆமுஷ்மிகமான நான்காவது புருஷார்த்தம் ஒன்றில்லை. பகவத் விஷயகாமம் அல்லது பேரின்பப்பேறே அது, இம்மையிலே, திருநறையூர் எம்பெருமானைக் கூடிக் கலத்தலே அப்பேறாகும், அஃது எளிதில் அடைய முடியாதிருப்பதால், மடலேறுதலாகிய கடினமார்க்கத் தால் அதனை அடையத்துணிகின்றேன்' என்றும் *சிற்றின்பப்பேற்றை அந்த மார்க்கத்தால் முன்பு பெற்ற மகளிர்போலவே, அப்பேரின்பப் பேற்றையும் அவரது முறையில் நின்று யான் அடைவது திண்ணம்' என்றும் தலைவி கருதிக் கூறுகின்றாள். என்பது இத்திருமடலின் கருத்தாகக் கொள்ளத்தகும். எனவே, தலைவியின்