பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

•316 ஆழ்வார்கள் காலநிலை மஞ்சுகையைத் தூக்கிச் சென்றனன். ஆனால், ஒரு சாபத்தால் அவளுக்குத் தங்கொன்றும் செய்ய இயல - வில்லை. அவளைச் சிறைவைத்து என்னைப் பாதுகாக்கும் படியும், நற்புத்தி புகட்டித் தன்னை மணந்துகொள்ளு ..மாறு தூண்டும்படியும் வேண்டினான். மதனமஞ்சு கையோ, எப்பொழுதும் அழுதகண்ணுடன் உன் பேரெழிலையும் பெருமைகளையுமே பேசியும் நினைந்தும் வருந்தினள், அதனால் நான் அவள் மேல் இரக்கங் கொண்டு, அவளுடைய நிலைமைகளை உன்னிடஞ் சொல் வதாக ஏற்றுக்கொண்டேன், அவள் வார்த்தைகளால் எனக்கும் உன்னைக் காணும் விருப்பம் பெரிதும் உண்டாயிற்று. உன்னைக் கண்டபின் உன்பால் உண்டான காதல்மிகுதியால் மதனமஞ்சுகைக்குச் சொன்னசொல்லைக் காப்பாற்ற என்னால் முடியவில்லை. இனி, மதனமஞ்சுகை உள்ள இடத்துக்கு உன் 2017 அழைத்துச்செல்லுகிறேன் என்று கூறி, வேகவதி தன் இயற்கையுருவோடு அவன் முன் தோன்றினள். தோன்றி யவளைக் கண்ட நரவாகனன் காதல்மிக்கவனாய் அவளைக் கலந்து மணந்து, மதனமஞ்சுகையையும் மறக்க லாயினன். மானதவேகன், தன் தங்கை வேகவதியைக் காணா மையால் வருந்தி அவளைத் தேடச்சென்றவன், முடிவில் அவள் நரவாகனனோடு வாழ்க்கைக் கண்டனன். ஒரு நாள் நரவாகனன் உறங்கிக் கொண்டிருக்கும்பொழுது இவ்விஞ்சைவேந்தன் அவனை ஆகாய மார்க்கமாகத் தூக்கிச்செல்ல, நரவாகனன் வழியில் 'விழித்துக் கொண்டான். அக்காலத்தில் இருவருக்கும் வாக்கு வாதம் உண்டாயிற்று. கீழே, உறங்கி விழித்துக் கொண்ட வேகவதி தன் காதலனைக் காணாது திகைத்து, நடந்ததை அறிந்தவளாய், விண்ணிடை