பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 317 விரைந்து பறந்து. சென்று, தன் தமையனைச் சந்தித்து அவனுடன் பெரும்போர் புரியலானாள். அதனில், மானத. வேகன் நரவாகனனைக் கைவிட்டுவிட வேண்டிய தாயிற்று. அதனால், அந்தரத்தினின்று வீழ்ந்த அவனை. அமிர்தபதி என்ற அவனது பழைய நண்பன்' காப்பாற்றினன். பின்பு, வேகவதி தன் காதலனான' நரவாகனதத்தனை அடைந்து இன்புற்று வாழ்ந்தனள் என்பது அவ்வரலாறு. இவற்றால், பெருங்கதையிலும் நரவாகன சரிதத். திலும் கண்ட வேகவதீலாபமென்றகதையே திரு. மங்கையார் பாடியருளிய வேகவதி வரலாறு என்பது. நன்குதெரியவரும், இனி, மேற்கூறிய மடற்கண்ணிகளில் வேகவதி.... வாளமருள்........காளையைக் கைப்பிடித்து” என வருவ. தனால், மானதவேகன் தன் முன்றோன்றலாயினும் வேகவதி அவனைப் போரில் வென்று தன் கணவனைக். கைப்பற்றிய செய்தி அறியப்படும். மேலேகாட்டிய நரவாகனசரிதத்தில், வேகவதிக்கும் அவள் தமையனுக். கும் ஆகாசத்தில் போர் நடந்ததாகக் கூறப்பட்டுளது.. இதனால், அச்சரிதத்துக்கு ஏற்ப, மடலில் வாளமருள் என்று ஆதிப்பாடமாக அமைந்திருந்ததுபோலும். வான் அமர் - ஆகாசப்போர். னகர ளகரங்கள் ஏட்டெழுத்துக். களில் மாறிய இடங்கள் பலவாம். இக்கதைபோலவே, சிறிய திருமடலில் வாரார் வனமுலை வாசவ தத்தையென்று ஆரானுஞ் சொல்லப் படுவாள் அவளுந்தன் பேராய மெல்லா மொழியப் பெருந்தெருவே தாரார் 'தடந்தோள் தளைக்காலன் பின்போனாள் ஊரா ரிகழ்ந்திடப் பட்டாளே