பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

318 ஆழ்வார்கள் காலநிலை என்று இவ்வாழ்வார் பாடிய வரலாறு, மேற்கூறிய நரவாகனனுடைய தந்தை உதயனனால் காதலித்து மணக்கப்பெற்ற வாசவதத்தையின் சரிதம் என்றும், மேற்கூறியது அவன் மகனைக் காதலித்தவளது சரிதம் என்றும், இவற்றுக் கெல்லாம் மூலம் (தணாட்யரது பிருகத்கதையும், அதன் வழிநூல்களுமே என்றும் நாம் அறியலாகும். 18. , பெரிய திருமொழி 2-9-1 ஆம் பாசுரத்தில்பல்லவன் வில்லவ ளென்றுலகிற் பலராய்ப் பலவேந்தர் வணங்குகழற் பல்லவன் மல்லையர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ண கரமதுவே என்ற அடிகளில், பல்லவன் வில்லவன்' என்பது வல்ல வன்' என்று திருத்தம் பெறவேண்டும், (வல்லவன். சளுக்கியன். வில்லவன்-சேரன்.] திருமங்கை மன்னன் அருளிய பரமேச்சுர விண்ண கரப் பதிக முழுவதும் இரண்டாம்' நந்திவர்மன் என்ற பல்லவமல்லனது வரலாறுகளைக் கூறுவதென்பதும், பெருவீரனும் பரம வைஷ்ணவனுமான இவ்வேந்தர் பெருமானது நீண்ட ஆட்சிக்காலத்தில், இவ்வாழ் *வாரும் விளங்கியவர் என்பதும் முன்பே தெளிவிக்கப் பட்டடுள்ளன. இப்போது வழங்கும் மேற்கண்ட பாட முறையில், இப் பல்லவ மன்னனுக்குப் பணிந்தடங்கிய வேற்றரசர்களிலே, பல்லவ மன்னனும் ஒருவன் என்று கொள்ள நேர்கின்றது. பல்லவ மன்னரிருவரிருந்து ஒருவரை யொருவர் இவ்வாறு வணங்கியவராக ஆழ்வார் 1. ஆழ்வார்கள் காலநிலை, திருமங்கைமன்னன்வரலாறு காண்க.