பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருனிச் செயற் பாடவமைதி 319 ஒருகாலும் பாடியிரார் என்றே சொல்லலாம். பல்லவரின் பழம் பகைவருள்ளே தலை சிறந்தவர், சளுக்கியவேந்தர் என்பது சரித்திரப் பிரசித்தம். இவர்களை வல்லபர், வல்லவர், என்று நூல்களும் சாஸ்னங்களும் வழங்குவன இவற்றுள் வல்லவன்' என்பதே பல்லவன் என்று இங்கு மாறியதெனச் சொல்லலாம். * வஸ்ய வல்லப களப்ர கேரளா: பாண்ட்ய சோள துளு கோங்கணாதய: த்வாரதேச ஸமயா பிகாங்க்ஷணஸ் ஸேவிதுந் நிரவகாச மாஸதே என்பது மேற்கூறிய மல்லவபல்லனது 61-ஆம் ஆண் டில் அமைந்த சாஸன சுலோகம். “எவனுடைய அசார வாசலிலே வல்லபர், களப்பிரர், கேரளர், பாண்டியர், சோழர், துளுவர், கொங்கணர் முதலிய மன்னர்கள் சமயத்தைவிரும்பியவர்களாய், அது கிடைக்காமற் காத்திருக்கின்றனரோ” (அந்த நந்திவர்மபல்லவன்) என்பது இதன் பொருள் - தம் காலத்தில் இச்சாஸனம், வல்லபரைத் தலைமையாகவைத்துக் கூறியவாறே, "வல்லவன் வில்லவ னென்றுலகிற் பலராய்ப் பல்வேந்தர் வணங்குகழற், பல்லவன்" சான்று ஆழ்வாரும் பாடினர் என்பதே பொருத்தமாகும். இவ்வடியின் நான்காஞ்சீரிலே பலராய் என்பதிலுள்ள பகரத்தை மோனை யெழுத்தாகக்கருதி அதற்கேற்பப் பல்லவன் என்று முதற்சீரைப் பின்னோர் மாற்றிக் கொண்டனர்போலும். இனி, 'உலகிற் பலராய்ப் பலவேந்தர்' 1. பட்டத்தான்மக்கல தாம்பிரசாஸனம்.