பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை 23 இனி ஆசாரியர் என்போர், அவ்வாழ்வார்கட்குப் பிற்காலத்தே அவர்கள் அருளிச்செயலின் வழியைப் பின்பற்றி ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தைப் பிரவசனஞ் செய்து, நாட்டை உய்யக்கொண்ட பெரியோராவர். இவர்கட்கெல்லாந் தலைவரானவர், ஸ்ரீமந் நாதமுனிகள் என்பது பலருமறிவர். வரலாறுகள் ஆழ்வார் ஆசாரியர்களென்ற இவ்விருவகைப் பெரியார்களின் வரலாறுகளைக் கூறும் நூல்கள் (தக்கயாகப், 193, உரை), 'புத்தனுடைய என்பாகிய தாது ஆழ்வார்' (நீலகேசி, மொக்கல. 82, உரை), 'ஈழ மடிப்படுத்த தாடையாழ்வார்'(புத்தசரித்திரம், பக் 25) என்று 'புத்ததேவர்க் கும் அவர் சம்பந்தமுடையார்க்கும், அவிரோதியாழ்வார் (திரு நூற்றந்தாதி) எனச் சைனமுனிவர்க்கும் கூறப்படுதல் காண்க. இதனால் கடவுளர்க்கும், அடியார்கட்கும், மக்களிற் சிறந்த இருபாலார்க்கும் இச்சிறப்புப் பெயர் முற்காலத்தே பெருவழக்கிலிருந்த செய்தி தெரியலாம். திருச்சிற்றம்பலத் தாள்வார், கோவிந்தபாடி யாள்வார், ஆள்வார் அரிகுல கேசரி தேவர் (s. i. i. ili, 386, 342, 248,) என இஃது ஆள்வார் என்றும் சாஸனங்களிற் பயிலும். இங்ஙனம் பெரு கிய வழக்குக்களிலிருந்து. இச்சொற்கு ஸவாமி, பெரியோர் என்பதே பண்டைப்பொருளாக வேண்டுமென்று தோற்று கின்றது. 'பிறரை அடிமைகொண்டு ஆள்பவர்' என்ற பொருளில் ஆள்வார் என்று வழங்கிவந்தது, பின்பு ளகரழகர வேற்றுமையின்றி ஆழ்வார் எனத் திரிந்ததோ வென்றும், பெண்பாலரான திருமாலடியார் ஒருவர் ஆண்டாள் என்றும், ஆசாரியத்தலைவரிற் சிலர் ஆளவந்தார் ஆண்டான் என்றும் வழங்கப்பெறுவதை நோக்கு மிடத்து, ஆள் என்பதே ஆழ்வார் என்பதற்குப் பகுதியோ என்றும் சங்கிக்க இடமுண்டு.