பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

320 ஆழ்வார்கள் காலநிலை என்பதனுள், 'பலராய்' என்ற பின்னரும் பல' என ஆழ்வார்திருவாக்கில் திரும்பப் பயிலக்கூடிய தன்று. ‘பலபெயர்களாலேசொல்லக் கூடிய பல அரசர்கள்" என்று, உள்ளபாடத்துக்குப் பொருள் சொல்லக்கூடும். 'வல்லவன் வில்லவன் என்று பலராய்' என்பதே அப் பொருள் தரக்கூடுமாதலால், புனருத்தியாக இவ்வாறு பாடப்பட்டிராது என்றே சொல்லலாம். ஆகவே வல வேந்தர்' என்றிருந்தது 'பலவேந்தர்' என மாறியதோ என்று தோன்றுகிறது. பழைமையான தமிழ் கிரந்த எழுத்துக்களிலே, வகர பகரங்கட்குள் அதிக வேற்றுமை யில்லை, இதுபோலும் மாற்றங்கட்கு அவ்வெழுத்துக் களின் ஒற்றுமையும் ஒரு காரணமாகும். வல்லவன் என்ற பாடத்துக்கு, மேற்குறித்தபடி, ஐந்து ஆறாஞ்சீர் களில் மோனை பயிலுதல் நோக்கிக்கொள்க. 19. ஷ திருமொழி 3-4-4-ஆம் பாசுரத்தில்“பஞ்சியமெல் லடிப்பின்னை திறத்துமுன்னாள் பாய்விடைக ளேழடர்த்து என்றுள்ள தொடரிலே, பஞ்சியமெல்லடி' என்பது 'பஞ்சி மெல்லடி' என்று திருத்தம்பெறத் தக்கது. "பஞ்சி மெல்லடிப் பரல்வடுப் பொறிப்பு (பெருங்கதை 2-9-162) “பஞ்சிமெல்லடியனார்தம் பாடகந்திருத்தி (சீவக. 2318) “பஞ்சிமெல்லடிப்பாவை (கம்பரா. கங்கை , 20.) ஷ ஷ (பெரியபு. தடுத்தாட், 160, 2, இவ்வாறன்றி, பவவேந்தர் - வலிபொருந்திய என்று பொருள் கொள்ளுதலும் அமையும்.