பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

324 ஆழ்வார்கள் 'காலநிலை குளிர்ச்சி, அழகு என) அஞ்சுவகைப்பட்டிருக்கை, அல் என்று ராத்ரி; அத்தால் இருட்சியை நினைக்கிறது. ஓதி என்று மயிர்முடி” என்பது அவ்வியாக்யானபந்தி. இப்பாடத்தின் பழம்பொருளை நாம் கௌரவிப்போ மாக. ஆயினும் அஞ்சிலோதி' என்பது, பழைய தமிழ் வழக்கானபாடம் என்பதை நாம் மறக்கமுடியாது. சங்கச்செய்யுட்களிலும் பின்னூல்களிலும் அழகிய பெண்பாலைக் குறிக்குமிடத்து இத்தகைய தொடரே வழங்குவதாம். ஐங்குறுநூறு (49, 299, 391,448) குறுந்தொகை (280) சிலப்பகிகாரம் (25, 75) சீவகசிந்தாமணி (134, 691) என்பன முதலிய இடங்களிற் கண்டுகொள்க, அம் சில் ஓதி-அழகிய, சிலவாகிய, கூந்தலையுடைய பெண், சின்மெல்லோதி' என்றும் வழங்குப (பெருங்கதை, 1.41-76), பெண்ணின் இளமைபற்றிக் கூந்தற்குச் சின்மை கூறப்பட்டதென்க. சின்மை-சிலவாந்தன்மை; குறுமையுமாம் (பதிற். 76- உரை). 24. ஷ திருமொழி 14-8-3, 4-ஆம் பாசுரங் களிலும், மற்ற ஆழ்வார் அருளிச்செயல்களிலும் “தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப்பெய்து *உருவார் பிறவிக்கள் இன்னம் புகப்பெய்து “உன்னடிக்கள் எந்நாள்வந்து கூடுவனே “கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே" (திருவாய் 6-10-6; 4-10-6) “மெல்லடிக்கள், குருதிசோர” (பெருமாள். 6-4) என்பன முதலிய பலவிடங்களில் பிறவிக்கள்' 'திருவடிக் கள்' என்றிவ்வாறுள்ளவை பிறவிக்கண், திருவடிக்கண்.