பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

326 ஆழ்வார்கள் காலநிலை. (சோம்பரை உகத்திபோலும்' - 'அவர் கடாம் புலையர்போலும்' என ஏனையிடங்களில், இச்சொல்லின் திரிபில்நிலை தொண்டரடிப் பொடியாழ்வார் வாக்கால் விளங்கிய வாறே, 'வழிபட அருளினாய் போன்ம்' என அதன் திரிந்தநிலையும் அவர் திருவாக்கிற் பயின்றுள்ளமை உணரத்தக்கது. 26. பெரிய திருமொழி 1-4-6-ஆம் பாசுரத்தில்--- "காரணந் தன்னாற் கடும்புனற் கயத்த கருவரை பிளவெழக் குத்தி வாரணங் கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்து ளானே என்ற அடிகளின் முதலில் கடும்புனற் கயத்த' என்ற பாடம் இப்போது வழங்கிவருகின்றது. இதற்குத் திவ்யார்த்த தீபிகை ஆசிரியரான ஸ்ரீ. உப, வே, அண்ணங்கராசாாரியஸ்வாமி, “வேகமாகப் பெருகுகின்ற ஜலம் நிறைந்த பள்ளங் களையுடைய.......” (மலை அல்லது கங்கை ) என்று பதப் பொருளும், கயத்த என்பதற்குத் தகைந்த' என்று சிலர் பொருள்கூறுவர். அஃது ஆதராமற்றதாகும். கைத்த என்ற பாடமிருப்பின், அப்பொருள் கொள்ளலாகும்...... பெரியவாச்சான்பிள்ளை அருளிய வ்யாக்யானத்தில்‘பகீரதன் கங்கையை அவதரிப்பிக்கிறபோது, நடு வழியிலே ஒரு மலை தகைந்துகொடுநின்றதாக, அத்தை