பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 327 இருபிளவாம்படி குத்தி யானைகளையும் உருட்டிக் கொண்டு இவ்வருகேபோந்து இழிந்ததாகச் சொல்லக் கடவது' - என்று அருளிச்செய்திருப்பதைக் கண்டு, 'கயத்த' என்பதற்குத் தகைந்த என்று சிலர் பொருள் வரைந்திட்டனர் ....... அவ்வாறுகொள்ள வழியுமில்லை, அவசியமுமில்லை." என்று விரிவுரையும் எழுதியருளினர். ஆனால் ஸ்வாமி கூறிய பொருள், பெரியவாச்சான்பிள்ளை எழுதாத் அர்த்தாந்தரமேயாகும். அப்பொருளின்படி, கடும்புனற் கயத்த' என்பது கங்கையை விசேடிப்பதானால், அது தூரான்வயமாகின்றது. அவ்விசேடணத்தால் பெறப் படும் பொருணயத்தினும், பிளவெழக்குத்தப்பட்டதற்கு ஏ துவைக் குறிக்கவேண்டி மலை அவ்வாறு விசேடிக்கப் பட்டதென்பதே சிறப்பாகும். பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானத்தில் ஒருமலை தகைந்து கொடுநின்றதாய்', "அம்மலை தகைந்தவளவிலே' என்று இருமுறை தகைதற் சொல் பயில்வதாலும், இதற்கேற்ப, 'ஜலத்தைத் தகைந்த' என்று பதவுரைகாரரும் எழுதியிருப்பதாலும், 'ப்ரஸக்தியை நிரூபணஞ்செய்வதற்காக' அன்றி, ஏதோ ஒரு மூலச்சொல்லைத் திருவுளத்துக்கொண்டே தகைதற் பொருளை அப்பெரியார் குறிக்கலாயினர் என்பதில் ஐய மில்லை. ஆழ்வாரது சொல்தொடரமைதிகளை அடி யொற்றியே பெரியவாச்சான்பிள்ளையின் வ்யாக்யான பந்திகள் பெரும்பாலும் அமைந்துள்ளன என்பதையும், பாடவுண்மைகள் விளங்குவதற்கு அவை பேருதவியா யிருப்பதையும் தீபிகையாசிரியான ஸ்வாமியே பல இடங்களிலும் நிரூபணஞ்செய்திருக்கிறார். சிறிது நுணுகிநோக்கினால், பிரஸ்தாபப்பாடத்திலும் அவ்வாறு