பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 ஆழ்வார்கள் காலநிலை பலவாம். அவற்றுள், ஸ்ரீராமாநுஜர்காலத்தே அவர் திருவடி சம்பந்தம் பெற்று, அவரால் ஸ்ரீரங்கநாத னுடைய வைத்தியசாலைக்குத் தலைவராய் நியமனம் பெற்று விளங்கியவரும், கவிவைத்ய புரந்தார் என்ற சிறப்புப்பெயர் பெற்றவருமான கருடவாகன பண்டிதரால்' வட மொழியில் காவியரூபமாகச் சுவைபெருக இயற்றப் பெற்ற திவ்வ சூரிசரிதமும், ஸ்ரீ நம்பிள்ளையின் திருவடி சம்பந்தம்பெற்ற பின்பழகிய பெருமாள் சீயரால் மணிப் பிரவாள நடையில் செய்யப்பெற்ற ஆறாயிரப்படி குரு பரம்பரையும் பழைமை பெற்றனவாகும். இவை யன்றி, பிரபங்நாமிருதம், பிரமதந்திரஸ்வ தந்திரசீயர் இயற்றிய குரு பரம்பரை முதலாகப் பிற்காலத்து நூல்களும் சிலவுள. ஆழ்வார்கள் வைபவங்களுடன் நாதமுனிகள் முதலாகவுள்ள ஆசாரியர் வரலாறுகளையும் இச்சரித்திர கிரந்தங்களினின்று நாம் ஒழுங்காகவே தெரிந்து கொள்ளக்கூடும். இவைகூறும் வரலாறுகளுள் ஆசாரிய

  • 1 இக் கருடவாகனபண்டிதர் எம்பெருமானாரான ஸ்ரீராமாநுஜயதிவரர் காலத்தவரே என்பதற்கு, அவ்விராமா நுஜர் வைபவத்தில் அப்பெரியார் திருநாடலங்கரித்த செய் தியைக் கூறாது, தாம் நூல் செய்த காலத்து அவர் எழுந் தருளியிருந்தவராகவே எழுதிச்செல்வது சிறந்த சான்றாகும். ஏனைய குரு பரம்பரைகள் யாவும் எம்பெருமானார் திருநாட்ட லங்கரித்த செய்தியை விரிவாகவும் உருக்கமாகவும் விடாது கூறுதலுங் காண்க. ஸ்ரீராமாநுஜர்க்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின் ஆறாயிரப்படி குருபரம்பரை இயற்றிய பின்பழகிய பெருமாள் சீயர், தம் நூலுள் இத்திவ்யசூரிசரிதத்தைக் குறிப் பிட்டு அதன் சுலோகங்களைப் பிரமாணங்காட்டுதலாலும் அதன் பழைமை வலியுறுவதாம்.