பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

330 ஆழ்வார்கள் காலநிலை. என்றே திருப்பதியின்பெயர் வழங்குகின்றது. இப்பெயர் வழக்குப் பற்றித் திவ்யார்த்த தீபிகையில், (ஆச்சிராமம் என்பதனுள் )-"ரா என்று நீட்ட வேண்டிய காரணமொன்றும் இல்லை. பதரிகாச்ரமம்" என்ற வடசொல், வதரியாச்சிரமம் என்று திரியுமே யன்றி , ரகரம் நிண்டுவரக் காரணமில்லை .................... ஆயினும் (பெரியோர் வழங்குவதால்) அப்பாடத்தையே ஆதரிக்கமுற்பட்டோம். என்று எழுதப்பட்டுளது. இதனால், ஆச்சிராமம் என்ற வழக்குத் தவறானதாயினும் பெரியோர்பாடம் என்று தீபிகையாசிரியர் கருதினர் என்பது தெரியலாம். இவ்வாறு, ஆச்சிராமவிஷயத்தில் எவரும்' சிரமங் கொள்ளவேண்டிய அவசியமில்லை. வடமொழி தென் மொழிச் சொற்றொடர்களிலே, இடையில்வரும் அகரம் நீண்டு மரூஉவாய் வழங்குவது தொன்றுதொட்ட தமிழ் வழக்கேயாம். காண்டாவனம், இட்டாதெய்வம், வயிச்சி ராவணன் முதலாக ஆழ்வார்கள் வழங்கியுள்ளமை காண்க, வயிச்சிராவணன் என்ற சொல்வழக்கை முன்னோர் அருளிய வ்யாக்யானக்குறிப்பும் நன்கு வலியுறுத்துகின்றது. (இக்குறிப்பை ஸ்வாமி இடைச் செருகலாகக்கொண்டது என்னோ ?) உலகவழக்கிலும், காலாகாலம், சகாதேவன், கத்தாரிக்காய், அஞ்சாறைப் பெட்டி, என, இடையில் அகரம் நீண்டு வழங்குதல் காண லாம். சிவதலங்களிலே திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், சுந்தரமூர்த்திநாயனார்- இருவராலும் பாடப் பெற்ற திருப்பதியொன்று, பாச்சி லாச்சிராமம் என்ற பெயர்பெற்றிருத்தலும், தேவாரத்தில்,