பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • 332)

ஆழ்வார்கள் காலநிலை என்ற வ்யாக்யானத் தொடர்களால் அறியப்படும். ஒன்று சொன்னார், அதனால் அங்கம் மெலிய 'வளைகள் கழன்றன. அங்ஙனம் சொன்னசொல்லும் உடன் பாடன்றி மறைவினையான தொன்று (பிரியேன் என்பது) அதுவும் வாயாற்சொல்லி யாற்றுந் தரத்த தன்று” என்பது போந்தபொருள். திவ்யார்த்த தீபிகைக்காரர்-"ஆது கொலோ என்று 'சொன்னபின்னை .அப்படிப்பட்ட பிரிவை உணர்த்தினது முதலாக” என்று பதவுரையிலும், "ஆதுகொலோ வென்று'- அது என்பது ஆது என நீண்டுகிடக்கிறது; உன்னை ஒருநாளும் விட்டுப்பிரியமாட்டேன்' என்று காதலர் கூறும் வார்த்தையுண்டே, அதுவே இங்கு விவுதம் என்று விசேஷவுரையிலும் எழுதியுள்ளார். இப் பதபாடம் பெரியவாச்சான்பிள்ளை எழுதாதது. மூலத் தொடர்க்கோ, வ்யாக்யானபந்திக்கோ இப் பதவுரை கருத்துரைகள் எவ்வாறு பொருந்துவன என்பதும் தெரியவில்லை. மேற்கூறிய வ்யாக்யானபந்திகளையும் அதன் கருத்தையும் ஆராயும் அறிஞர்க்கு யாது 'கொலோ ஒன்று' அல்லது 'ஆதுகொலோவொன்று' *என்பதே ஆழ்வாராசாரியர்கள் திருவுள்ளமான பழம் பாடமென்பது மிகத் தெளிவாகும். ஆது-யாது. (பெ. திருமொழி, 9-3-9.) 29. திருமங்கையாழ்வார் அருளிய திருவெழு கூற்றிருக்கையில், 'கற்போர் புரிசெய் கனகமாளிகை' என்று பாட மும், அதற்கு வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி,' 'பொன்னாலே செய்யப்பட்டமாளிகை' என்று வ்யாக்யானமும் காணப்படுகின்றன. திவ்யார்த்த தீபிகையாசிரியரும் இங்கு-ாபெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்திக்குத் தகுதியாகப் புரிசெய் என்ற பாடம்