பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச்செயற் பாடவமைதி 333 கொள்ளத்தக்கது.......கற்போர்களுடைய புரியாகச் செய்யப்பட்டதென்க” என்று குறிப்பெழுதியுள்ளார்.. ஆனால் இவ்வாசிரியர் திருவுளப்படி, 'புரிசெய்' என்று, பெரியவாச்சான்பிள்ளை பதபாடம் குறிக்கவில்லை. கற்போர் புரி (-வித்வான்கள் வாழும் நகரி) என்றும், செய்கனக மாளிகை (-கனகம்செய் மாளிகை) என்றுமே அப்பெரி யார் பிரித்துப் பொருள் எழுதினர். இது கிடக்க. இனி, பெரியதிருமொழி 5-1-4ஆம் பாசுரத்தில், ' 'கற்பார் புரிசை செய்குன்றம் கவினார்கூடம் மாளிகைகள் என்று அவ்வாழ்வாரே அருளியதினும் கற்பார்புரிசை" என்று இதனோடொத்த தொடரைக் காணலாம். தொழில் மிக்கிருந்துள்ள புரிசை' (-மதில்) என்பது, இதற்குப்! பெரியவாச்சான்பிள்ளை அருளிய வியாக்யானம், இத் தொடரே சிறிதுமாறித் திருவெழுகூற்றிருக்கையிலும் பயில்வதாயிற்று என்றும், அதனால் கற்போர்புரிசை* என்ற பாடமே திருமங்கைமன்னன் திருவுள்ளமென்றும் கொள்ளக் கூடுமன்றோ ? இவற்றால், 'கற்போர் புரிசெய்" என்ற திருவெழு கூற்றிருக்கைப்பாடமும், அதற். கமைந்த வ்யாக்யானத் தொடர்களும் பெரியவாச்சான் பிள்ளை கருத்துக்கு மாறானவையென்றும், “கற்போர் புரிசை - தொழில் ஓரப்படுதற் குரிய மதில்” என்று பாடமும் பொருளும் முன்பு அமைந்திருந்தவையே பின்னோரால் மாற்றப்பட்டன என்றும் கருத இடந்தரு. கின்றது. இப்பாடமும் பொருளும் வேறு வ்யாக்யான மொன்றில் காணப்படுவதாக, தீபிகையாசிரியர் குறிப் பிட்டிருப்பதும் அறியத்தக்கது. 30. திருவிருத்தம் 61-ஆம் பாசுரத்தில் “ஞாலமுற்றும், வேயக மாயினுஞ் சோரா வகையிரண் டேயடியால் தாயவன்