பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

334 ஆழ்வார்கள் காலநிலை என்பதில் (வேயகமாயினும்' என்பது ஏயகமாயினும்! என்றிருத்தல் மோனைக்கு மிகவும் சிறக்கும், ஏயகம் - அம்புக்குத்திடம்; மயிர்க்குத்திடம், அம்புக்குத்திடம், கோற்குத்திடம் என்ற தொடர்கள், இடச்சிறுமைகுறிக்க வழங்குவன. வேய்ங்கழிபோலவே, அம்பும் கோல் என வழங்குவதேயாம். பிழையார் தாம் தொடுத்த கோல்' என்றார் குறிஞ்சிக்கலியிலும் (39), 'ஐங்கோலை வென்று முக்கோலைக் கைக்கொண்டவன்' என்றார் பின்னோரும், ஆதலால், வேயகம் எனினும் ஏயகமெனினும் கோற் குத்துநிலம் என்ற பொருளொற்றுமை உடையதேயாம். ஆனால் ஏயகம்' என்ற பாடம் மோனையின்பமுடைய தாதல் கண்டுகொள்க, திவ்யார்த்த தீபிகைகாரரும் மோனைநயம்பெறப் பாடாந்தரங்களைக் கண்டு கூறி யுள்ளது ஒப்பிடத்தகும். (பெரிய திருவந்தாதி, 24; திருவிருத். 45, உரை). 31. பெரியதிருவந்தாதி 14-ஆம் பாசுரத்தில் “............................... .நீயார் போய்த் 'தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும் தீவினையாம் பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்தி" என்று இப்போது ஓதப்பட்டு வருகின்றது. திவ்யார்த்த தீபிகையாசிரியரான ஸ்வாமியும், இப்பாடத்தை ஏற்றுக் கொண்டே உரையிட்டருளினர். வெண்பாவீறு பார்த்தி' -என முடிவது தமிழ்விதிக்கு முற்றும் மாறானதென்பது, அறியத்தக்கது',வெண்பாவீறு, நாள் மலர் காசு பிறப்பு 1. முதற்றிருவந்தாதி 97-ஆம் வெண்பா ஈற்றடி, புனற்கங்கை யென்னும் பெயர்ப்பொன்' என்றும் பாடம் வழங்குவதென்றும், இதனில் - தளை தட்டுதல் இல்லையாயினும் மோனையின்பம் குறையுறுகின்றதென்க.' என்றும் தீபிகை யாசிரியர் எழுதியுள்ள குறிப்புரையும் மேற்கூறியதை வலியுறுத்தும்.