பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 335 என்ற வாய்பாடொன்றால் இறுவதும், அவற்றுள் காசு பிறப்பு இரண்டும், குற்றுகரமாகவும் சிறுபான்மை முற்றுகரமாகவும் முடிவதுமே விதி. ஆழ்வார்கள் திருவாக்குக்களிலும் வேறெந்த நூல்களிலும் இவ்விதி வரம்பு மீறப்பட்டதில்லை. பார்த்தி' போன்றவற்றை ஆர்வமாகக்கொண்டு சிலர் வழுவமைப்பது, ஆழ்வார் திருவாக்குக்களை, விதிக்கடங்காத சித்தர் பாடலாக்க முயல்வதேயாகும். ஆகவே, பார்த்தி' என்று ஓதும் பாடத்தைப் பார்த்து' என்று திருத்தம்பெற ஓதல் வேண்டும். இத்திருத்தம் பெரியவாச்சான்பிள்ளை வ்யாக் யானத்துக்கு விரோதமானதே அன்று. 'பாம்பின் வாய்ப்பார்த்துக் கைநீட்டல் நீ' என்று அன்வயித்து, நீட்டலைச்செய்யும் நீ' என்று திருவுளங்கொண்டு நீட்டு வார்போலேயிருக்கிற நீ' என்று அப்பெரியார் உரை யருளினர். தீபிகையாசிரியர், பார்த்தி - முடியப்பார்க் கிறாய்' என்று எழுதிய பொருள், பெரியவாச்சான்பிள்ளை கூறாததேயாம். அவரது வ்யாக்யானமுடிவில் கிட்டுகிறா யன்றோ' என்பதற்கு, பாம்பின்வாயிலே கைநீட்ட, க் கிட்டுவார்போல, கிட்டுகிறாயன்றோ என்பதே பொருள் என்க. இனி, கைநீட்டல் (நீட்டுகிறது) யார்? என்று இயைத்து உரைப்பினும் அமையும். 'அங்கே கதவைத் திறத்தல் யார்' என்ற வழக்குங் காண்க. இவ்வாறு, வெண்பாவீறு மரபுசிதையாமற் காக்கப் படவேண்டியதுபோலக் கட்டளைக் கலித்துறையிறும் காக்கப்படவேண்டியது ஒன்றுண்டு. 32. திருவிருத்தம் 40-ஆம் பாசுரத்தின், 3, 4-ஆம் அடிகள்*ஞாலப்பொன் மாதின் மணாளன் துழாய்கங்கள் சூழ்குழற்கே ஏலப் புனைந்தென்னை மாரென்னை நோக்குவ தென்று கொலோ