பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

336 ஆழ்வார்கள் காலநிலை , என்று இப்போது ஓதப்படுகின்றன. இவ்வடிகளி னீற்றில் என்று கொலோ' என வந்துளது, புதுமையே யாம். கட்டளைக்கலித்துறையீறு இவ்வாறு வருவதை அருளிச்செயல்களிலோ, தமிழ் நூல்களிலோ எங்குங் கண்ட தில்லை. அது ஏகாரமாகவே முடிதல் விதி. ஆனால் தீபிகையாசிரியர்- என்று கொலோ' என்பதையே ஆதரிக்கிறார். இவ்வாதரவுக்குப் பெரியவாச்சான்பிள்ளை யின் பதபாடம்' கிடையாது. இனி, என்றுகொலே" என்ற பாடமும் உண்டென்பர். இதற்கு, என்றுகொல்என்றோ; ஏ-கட்டளைக்கலித்துறை யிறுதியசை என்க, யாப்புவிதிக்குமாறாக என்றுகொலோ என்பதைக் கொள் வதினும், இப்பாடம் கொள்ளலாகும். ஆயினும், கொலே' என்ற வழக்கு அருகியதே. யாம். ஏட்டெழுத்தில், ககரசகரங்கட்குள் பெரும் பான்மை எழுத்தொப்புமை உண்டு. அதனால், பாட. மயக்கம் நேர்தல் இயல்பே. அம்முறையில், என்று சொலே' என்பது, என்று கொலே' என்று பாடங் கொள்ளப்பட்டதுபோலும், என்று சொல்லே - எந்நாள் சொல்லுகை எ-று. 'தன்கிளியைச் சொல்லே என்று" எனத் திருமங்கைமன்னன் அருளியதும் ஒப்பிடுக. ஆயின், நேரிழையீர்....... சொல்லே' என்று முடிந்துளதே. எனின், "என்னீ ரறியாதீர்போல இவைகூறின் நின்னீர வல்ல நெடிந்தகாய்' பேசில் நங்காய்; மாமாய்ன் என்மகளைச் செய்தளகள் மங்கைமீர் மதிக்கிலேனே” (பெரியதிரு. 5-5-4) என்ற இடங்களிற்போல, ஒருமைபன்மை மயக்கமாகக் கொண்டு அமைத்துக்கொள்ளத்தகும்.