பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 337 33. வெண்பாவும் கட்டளைக்கலித்துறையும் தனே வரையறை பெரிதுமுடையன என்பதும், தளைபிறழ நேருமாயின் அவை செய்யுளெனப்படா என்பதும் யாவரும் அறிவர். பெரிய திருவந்தாதி, 40ஆம் வெண்பாவில்“வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே போய்ப்போய் வெந்நரகிற் பூவியேல் என்புழி, போய்ப்போய்' என்பது தளை தவறிநிற்றலால் தீபிகையாசிரியர் வெண்டளை பிறழாமைக்காக இரண்டாமடியின் முதற்சீர், தேமாங்காய்ச்சீராய் அமையவேண்டுதல் பற்றிப் போய்ப்போஒய்' என்று அருளிச் செய்யப் பட்டது" (அருளிச்செய்தவர் தாமே என்றபடி) என்று எழுதியுள்ளார். இவ்வாறு, தளை பிறழாமற் காத்தலை மேற்கொண்ட அவ்வாசிரியர் கருத்துப் போற்றற்குரியது. ஆனால், இப்பிறழ்வுகள், திவ்யப் பிரபந்தத்திற் பலவிடங்களிலும் அமையும்படி அவர் ஷிட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, (பின்வரும் பாட வமைதிகள் காண்க.) இனி, 'போய்ப்போஒய்' என்று தீபிகையாசிரியர் செய்த திருத்தத்துள் இரண்டாம் போய்'க்கு மட்டும் அளபெடை கூட்டி, பின்னதற்குக் கூட்டாமல் விடப் பட்டுளது. இது, முன்னோர் முறையன்று. பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று நுதல் வெரீஇ வெரீஇ வருதியோ" “விடாஅ விடாஅ வொஇப் பெயரும் (பாப். வி.) என அடுக்குத்தொடர்கள் முழுதும் அளபெடுத்தவாறு. (போழய்ப் போஒய்' என அமைதலே ஏற்கும். ஆனால் இது வெண்பாச்சீர் அன்றாகும். இவ்வாறு தளையமைதிக்காகப் 22