பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

338 ஆழ்வார்கள் காலநிலை பின்வருஞ் சொல்லில் அளபெடை கூட்டுவதினும், அச் சொல்லில் பின்னோர் அறியாதிட்டுவழங்கிய புள்ளியை மட்டும் நீக்கிவிடின் வெண்டளை பிறழாத உண்மைப் பாடம் வெளியாதல் காணலாம். அஃதாவது---"போய்ப் போய வெந்நரகில்' என்க, “போய்ப்போய்+அ+வெந் நரகில்' எனப் பிரித்துப் பொருள்கொள்க. போய்ப் போயவ் வெந்நரகில்' என வகரக்கேடில்லாமற் பாடங் கொள்ளினும் அமையும். பெரியாழ்வார் திருமொழியில் (2-6-9) மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்று தீபிகையாசிரியர் பதிப்பித்துப்போந்ததையும் பூண(வ்) விபீடணநம்பிக்கு' என்று திருத்தி ஓசைநயம் பெற அமைத்துக் கொள்க, “மன்னியநாகத் தணைமேல் என்ற பெரிய திருமடற்றொடரில், தீபிகையாசிரியரே, மன்னி + அ + நாகத்தணைமேல்' என்று பிரித்துப் பொருள்கொண்ட முறைபோன்றதே, மேற் காட்டிய திருத்தம். இவ்விடங்களிலெல்லாம், அகரச்சுட்டு உலகறி பொருண்மேற்று. 34. நான்முகன் திருவந்தாதி 23ஆம் பாசுரத்தில், “வித்து மிடவேண்டுங் கொலோ விடையடர்த்த” என்ற முதலடி மூன்றாஞ்சிரைத் தளைபிறழாமல், *கொல்லோ' என்று திருத்திப்படிக்க. இங்ஙனமே, பெரியதிருவந்தாதி 76ஆம் பாட்டில்-- "உலகளவும் யானு முளனாவ னென்கொல்லோ” என்று தீபிகைகாரர்கொண்ட பாடத்தையும் என்கொல்' எனத்திருந்த ஓதத்தகும். 'கொலோவி டையடர்த்த' ‘ஆவனென் கொல்லோ' என்று பிரித்துத் தளைகொள்ளின், செப்பலோசையும் மோனைகளும் சிறந்து திகழும் முன்னோர் திருவாக்குக்