பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 339. களைக் கெடுப்பதேயாகும். இவைபோலக் கொல், கொலோ, கொல்லோ- என்பவை, வெண்பா முதலிய வற்றில் தடுமாறியமைந்த இடங்கள் தீபிகையுரையுட் பலவாகும், அவ்வவ்விடங்களிலே, அவை விளக்கப்படும். 35, நான்முகன் திருவந்தாதி 26ஆம் பாசுரத்தில்-- “கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா யானுன்ளைக் கண்டு கொள்கிற்கு மாறு” என்பதனுள், கண்டு கொள்கிற்கு மாறு' எனத் தீபிகையாசிரியர் கொண்ட பாடம், 'கண்டு கொளகிற்கு மாறு' என்று திருத்தற்குரியது. கண்டுகொள்ளவல்லனாம்படி என்பது பொருள். பணிந்தேத்திக் காண்கிலா' என்ற பெரிய திருமொழித் தொடரிலும் (2-1-9) காணகிலா' எனப் புள்ளி நீக்கி ஒசைநயம்பெற ஓதத்தகும். மேற் காட்டியபடி “கொள்கிற்கும்' என ஒற்றிட்டோதின் தளைசிதைவதாம், அவ்வாசிரியர் காட்டிய பதவுரை யிலும் ஒற்றிட்டே மூலங்காட்டப்பட்டிருத்தலாலும், தளைப்பிறழ்வுபற்றி அவர் குறிப்பிடாமையாலும் இத்திருத்தம் எழுதப்படலாயிற்று. 36. சிறிய திருமடலில்

  • பேரா யிரமுடையா னென்றாள் பேர்த்தேயும் என்பதனுள், தளைசிதையாவாறு, 'பெயர்த்தேயும்' என்று திருத்திப்படிக்க. இதுவும் மேற்கூறியபடி, திருத்தம் குறிப்பிடப்படாமையாற் காட்டப்பட்டது. 37. மூன்றாந்திருவந்தாதி 67ஆம் பாசுரம்*ஆங்கு மலருங் குவியுமால் உந்திவாய் ஓங்கு கமலத்தி னொண்போது-ஆங்கைத் திகிரி சுடரென்றும் வெண்சங்கம் வானிற் பகரு மதிவென்றும் பார்த்து