பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை 25 வைபவங்களாக உள்ளவை ஆராய்ச்சிமுறைக்கு அமைந்தவையாதலால், அவற்றுட் பெரும்பகுதியும் அவ்வாராய்ச்சிவல்லாரால் அத்துணையாகச் சங்கிக்கப் படவில்லை, ஆனால், அந்நூல்களிலே பிற்பட்டவற்றிற் கண்ட. ஆழ்வார்கள் காலங்களிலும், வேறுசில வற்றிலுமே தடைகள்-பல நிகழ்ந்து வருகின்றன. ஒரு கருத்து முற்கூறிய திவ்ய சூரிசரிதம், ஆறாயிரப்படி, இரண் டினும், நம்மாழ்வாரொருவர்க்கன்றி வேறெவர்க்கும் அவதார காலங்கள் குறிக்கப்படவில்லையாதலால், பிற்பட்ட நூல்களிற் கண்ட காலக்குறிப்புக்கள் இடைச் செருகலாகவேண்டும் என்பது அன்னோர் கருத்து, ஆழ்வார்களுட் சிறந்த நம்மாழ்வார்க்கும், ஆசா ரியத் தலைவரான நாதமுனிகட்கும் நேரான தொடர் பிருந்ததென்று திவ்யசூரிசரிதமும் ஆறாயிரப்படி குரு பரம்பரையும் கூறுவதாக அவர்கள் கருதுகின்றனர். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே நம்மாழ்வார் காலத்தை அவர்கள் அறுதியிடுவர். ஆனால், அவர்கள் கூற்றுக்கு உண்மையில் அந்நூல்களிலே யாதொரு தெளிவான ஆதாரமும் இல்லை. இதனை, நம்மாழ்வாரைப் பற்றிக் கூறுமிடத்து நன்கு விளக்குவேன். சுருக்கமாக ஒன்றுமட்டும் இங்கே அறிதற்குரியது; அஃதாவது-அவர்கள் கருத்துப்படி நம்மாழ்வார்க்கும் நாதமுனிகட்கும் நேரான சம்பந்த மிருந்திருப்பின், ஆழ்வார் ஆசாரியர் என்ற விபாகத் துக்கே சிறிதும் இடமில்லாதொழியும். - ஆழ்வார்களே ஆசாரியர்களாய்த் தலைமை வகித்து விளங்கவும், நாதமுனிகட்கு அத்தலைமை இல்லாமற்