பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 ஆழ்வார்கள் காலநிலை என்பது. இவ்வெண்பாவில் 'ஒண்போது-ஆங்கை' என்றுள்ள தொடர், 'ஒண்போ-தாங்கை' என்று புணர்தல் விதி. அப்போது வெண்டளை சிதைவதாம். அவ்வாறு தளை தட்டுவது ஆழ்வார்கள் திருவாக்குக்குச் சிறிதும் உரியதன்று. அதனால், போது' என்ற குற்று கரத்தின்பின் நின்ற மெய்ம் முதலான சொல்லொன்று, எப்படியோ கேடுற்றது என்பது அறிஞர்க்கு எளிதிற் புலனாகும். அக் கேடுற்றசொல் யாது? அது, 'தான்' என்பதேயன்றி வேறன்று. அஃதாவது “ஓங்கு கமலத்தி னொண்போது - தான்கைத் திகிரி சுடரென்றும்............. என்று ஆதியிலிருந்த பாடமே, 'ஒண்போ -தாங்கை ' எனப் பிற்காலத்துச் சிதைந்து வழங்குவதாயிற்று, என்க. தான் என்றது, மலர்ந்தும் குவிந்தும் வரும் அஃது என்னும் குறிப்பிற்று; அசைச் சொல்லுமாம். இப்பாடம் பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யான விரோதம் ஆகாமையும் நோக்கிக்கொள்க. முதற்றிருவந்தாதி 77ஆம் பாட்டில் வேங்கடம், பூங்கிடங்கில்-என்பவற்றுக்கு, நான்கும் என்ற தனிச்சீர் எதுகையானவாறே, ஈண்டும் ஆங்கு, ஓங்கு என்பவற்றுக்குத் தான்கை என்பது எதுகையாயிற்று. இப்போதைப் பாடம், அத்யாபகர் ஓதிய முறையில் சிதைந்துவந்ததேயாகும். இத்தகைய சிதைவுகள் நூல்களிலும் உலகவழக்கிலும் உண்டு, ஈண்டுப் போது தான்கை என்பதன் திரிபான "போதாங்கை' என்பது, சங்கதை (சங்கு + கதை) போடவும் தான்கை யென்பதன் திரிபான தாங்கை என்பது, புங்கு (புன்கு), நஞ்சை (நன்செய்) போலவும் வந்தன என்க, 38. இராமாநுச நூற்றந்தாதி 48ஆம் பாசுரத்தில்“நிகரின்றி நின்றவென் நீசதைக் குன்னரு வின்கணன்றிப் புகலொன்று மில்லை யருட்கும.. தேபுகல்.........."