பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி என்பது பழைய வியாக்யானப்பதிப்பின் பாடம். இதன் முதலடியைத் திவ்யார்த்த தீபிகையாசிரியர் "நிகரின்றி நின்றவென் நீசதைக்கு நின்னரு ளின்கணன்றி” என்று திருத்திப் பாட்டங்கொண்டுள்ளார். நான்முகன் திருவந்தாதி 70ஆம் பாசுரவுரையிலும் இத்திருத்தப் பாடமேகொண்டு, தம் தீபிகையில் இவ்வடியை அவர் மேற்கோள்காட்டியிருப்பது காணலாம். இதனால், வெண்டளைபிறழாதிருப்பதொன்றே, கட்டளைக் கலித் துறையடியின் இலக்கணம் என்பது அவ்வாசிரியர் கருத்தென்று தெரிகின்றது. இவ்வாறாயின், வேறிலக் கணமும் அதற்குச் சிறப்பாக உண்டென்பது அவர் அறியத்தகும். அஃதாவது- நேரசை முதலாகிய கட்டளைக்கலித் துறை, ஓரடிக்கு எழுத்துப் பதினாறும், நிரையசை முதலாகிய அதனடிக்கு எழுத்துப் பதினேழு மாய் வருதல் நியதி என்பதாம். நீசதைக்கு நின்னருள்' என்பதனுள் தளைதட்டல் இல்லையேனும், அத்தொடர் கொண்ட அடி, பதினெட்டெழுத்தாய் ஓசைசிதைதல் நோக்குக. ஆகவே, நீசதைக் குன்னருள்' என்ற முன்னோர்பாடமே, திருத்தமான பாடம் என்க. 39. பெரிய திருமொழி 9-3-3ஆம் பாசுரத்தில்' “தாதுமல்கு தடஞ்சூழ்பொழில் தாழ்வர்த் தொடர்ந்துபின் பேதை நின்னைப் பிரிவேனென் றகள்றா னிடம்” என்பதனுள் தாழ்வர்த் தொடர்ந்துபின்' என்று வியாக்யானப் பழம்பதிப்பினும், தீபிகைப்பதிப்பினும் காணப்படுகின்றது. ஈண்டு, பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம்: (தாதுமல்கு தடஞ்சூழ்பொழில் தாழ்வர்) பூக்கள் உதிர்த்த தாதுக்கள் மிக்கிருந்துள்ள தடாகங்களாலே சூழப்பட்ட பொழில் பர்யந்தங்