பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

342) ஆழ்வார்கள் காலநிலை களிலே; ஒத்த நிலங்களிலே என்றபடி, (தொடர்ந்து) ...போகஸ்ரோதஸ்ஸில் இவள் போனபோன வகைதொறும் வடிம்பிட்டுக்கொண்டு வந்தானா யிற்று. இவளுக்கு ஒருவகையால் ஓர் ஏற்றமுண்டாம் படி பண்ணிற்றிலன். எவ்வளவாகக் கலந்து பிரிந்தால் இவளை இழக்கலாவது, அவ்வளவும் கலந்து விட்டானாயிற்று" என்று உள்ளது. தடம்சூழ்பொழிலான ஒத்தமைந்த இடத்திலே, கலவியிடைத் தன்மேம்பாடே தோன்றவும்; தலைவிக்கு அதனில் ஏற்றமில்லையாம்படியும் அவளை விடாது தொடர்ந்து கலந்து பின் பிரியலாயினன் தலைவன் என்பதுகருத்து. இதனால் 'தாழ்வறத் தொடர்ந்து. பின் அகன்றான்' என்பதே மூலபாடமாதல் தெளியலாம். தாழ்வு அற கலவியில் (தலைவனது) குறைவு இல்லை' யாம்படி; எனவே, தலைவிக்கு அதனில் ஏற்றமின்மை பெறப்படும். இங்ஙனம்பெற்ற கருத்தையே, வ்யாக் யானத்தின் பின்வாக்கியங்கள் நன்கு விளக்கின. "ஒத்தமைந்த நிலத்திலே' என்பது பெறும்படி 'பொழில் பர்யந்தங்களிலே' என்றுள்ள தொடரில் பர்யந்தப் பொருளுக்குத் தாழ்வர்' என்பது மூலச்சொல்லாக வேண்டுமென்று கருதி தாழ்வர்த் தொடர்ந்து' என்ற பாடத்தைப் பின்னோரெல்லாம் வழங்கிவிட்டனர், உண்மையில், மூலத்தில் 'தாழ்வர்' என்ற சொல் கிடையாது. தாழ்வர் என்பதற்குப் பர்யந்தங்களில் என்ற பொருளும் தமிழ்மொழியில் இல்லை. 'பொழில் பர்யந்தங் களிலே' என்ற அச்சுத்தொடரும் சேராச்சேர்த்தியானது. ஆகவே, “தாதுமல்கு தடஞ்சூழ்பொழில் தாழ்வறத் தொடர்ந்து பின்" என்றே திருத்தமாக ஓதத்தக்கது.