பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆழ்வார்கள் காலநிலை போகவும் இடமேற்படும். அதனால், ஆழ்வார்கட்கும் ஆசாரியார் கட்கும் இடையே தொடர்ச்சியற்றிருந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை. அத்தொடர்பின்மை எவ்வளவு காலம் நீடித்திருந்ததென்பதே இங்கு விடை தரவேண்டிய கேள்வியாகும். ஆழ்வார்கட்குத் துவாபரயுகவிறுதியும் கலியுகாரம் பமும் அவதார காலங்களாகக் கொண்டு, அவரவர் அவதரித்த கல்யப்தம், வருஷ மாச திதி வார நக்ஷத்தி ரங்கள் இவையென்று பிற்பட்ட குரு பரம்பரைகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வாரைப்பற்றி சரித்திரவறிஞர் இக்காலக் குறிப்புக்களில் சிறிதும் நம்பிக்கை கொள்ளாமைக்கு, அவை முற்பட்ட திவ்யசூரி சரிதம் ஆறாயிரப்படிகளில் காணப்படாமை மட்டுங் காரணமன்று; பாண்டவருள் ஒருவனான அருச்சுனன் மகன் அபிமன்யு தொடங்கி 25-ம் தலைமுறையில் உதித்த உதயனனுடைய தேவி வாசவதத்தையின் வரலாற்றைத் திருமங்கை மன்னன் பாடுதலாலும், சாக்கிய வமிசத்து உதித்த கௌதம புத்தரால் தாபிக்கப்பெற்று அவர் பெயர் வாய்ந்த மதத்தைச் சார்ந்தவரைச் சாக்கியர் என்ற பெயரால் வழங்கலாலும் பாரதயுத்தத்துக்கும், கெளதமசாக்கியர் அவதரித்த காலத்துக்கும் பின்பே சடகோபர் முதலிய ஆழ்வார்கள் அவதரித்தவர்களாதல் வேண்டும் என்பதும், அவர்க ளருளிச் செயல்களிற் கண்ட தமிழ் நடையின் போக்கா லும் இலக்கணவமைதிகளாலும் சொற்பொருள் வழக்குக 1. ' இலிங்கத்திட்ட புராணத் தீருஞ் சமணருஞ் சாக்கி யரும்' (திருவாய். 4, 10, 5) சமணர் மிண்ட ர் விதியில் சாக்கியர்கள்' (திருமாலை, 8).