பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 ஆழ்வார்கள் காலநிலை அவ்வாசாரியத் தலைவர்க்குப் பிற்பட்டவர்கள் என்று -எழுதிவிட்டனர் ஒருசிலர். மாறங்காரி, மதுரகவி என்ற பெயர்கள் பாண்டியன் மந்திரியொருவனுக்கு வழங்கியிருத்தலைச் சாஸனத்திற் பார்த்ததும் காரிமாறன் என்ற நம்மாழ்வார், அம்மாறங் காரியின் மகனென்றே கருதிவிட்டனர் வேறு சிலர், மற்றுஞ் சிலரோ, நாயன்மாரது தேவாரத்தைப் படித்தே ஆழ்வார்கள் பதிகம் பாடத் தெரிந்து கொண்டனர் என்று கூசாது எழுதினர். வேறு சிலர், இதற்குப் பிரமாணங் காட்டுவார் போல, அடியாரும் பகவரு மிக்க தலகே' என்ற திருவாய்மொழித் தொடருள் (அடியார்' என்று சிவனடியாரான நாயன்மாரையே நம்மாழ்வார் குறித் தனர் என்று கூறினர்.! . இன்னுஞ்சிலரோ-"உன் திருவடிச் சூடுந் தகைமை யினார் - எப்படி யூரா மிலைக்கக் குருட்டாமிலைக்கு மென்னும். அப்படி யானுஞ் சொன்னேன்” என்று நம்மாழ்வாராற் கூறப்பட்டவர் ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்து” என்று பாடிய மாணிக்கவாசகரே -என்று வரைந்து வெளிப்படுத்தினர். இங்ஙனமே ஆராய்ச்சியின்றியும், போதிய பொருளுணர்ச்சியும் வழக்குணர்ச்சியும் இல்லாமலும் பலரும் பலபட எழுதிவருவாராயினர். 1 அச்சுதன் றன்னை...மேவித்தொழு மடியாரும்' என் றும் உன் திருவடிச் சூடுந் தகைமையினார்' என்றும், அடியார் திருவடி, எள்பவற்றுக்கு முன்னிற்கும் சொற்களின் பொருள் இன்னோர்க்குப் புலப்பட்டதில்லை.