பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை 29. நோக்கும் போக்கும் இங்ஙனம் குறை கூறுவதால், ஒரு சார்பின்றி. ஒழுங்கான முறையில் ஆழ்வார் சரித்திரங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்பவரே இல்லையென்று நான் கருதுவ தாகவேனும், இத்தகைய ஆராய்ச்சி செய்தற்குரிய தன்று என்பது என் - கருத்தென்றேனும் எவரும் நினைக்கக்கூடாது. சாஸனங்களும் மற்றக்கருவிகளும் பல்கிப் பெருகி வருதலால் உலக சரித்திரங்கள் அவாவுடன் ஆராயப் பெற்றுவரும் இக்காலத்தே, 'தெய்வத் தன்மை வாய்ந்த, அடியார்களின் கால நிலைகளைத் தெரிந்துகொள்ள நம்மவர் அவாவுவதும் இயல்பேயாம், அத்தகைய அவாவால் விளையும் ஆராய்ச்சிகளைத் தடுக்க முயல் வதும், அதன் பயனான முடிவுகளைத் தக்க காரணமின்றி. ஒதுக்குவதும் நவீனவுலகத்தின் முன் நடவாதசெயல்கள் என்பது தெரிந்ததே. அவ்வாராய்ச்சிகளால் உண்மை முடிபுகள் பல ஏற்படக் கூடுமாதலால், அவற்றை யாவரும் ஏற்றற்குரிய காலம் அதிக தூரமின்றி நெருங்கியுள்ளதென்பதில் ஐயமில்லை. தம் காலத்தில் மக்களிடம் வழங்கிய கர்ணபரம் பரைச் செய்திகளை ஒருமுகப்படுத்தி முன்னோர் எழுதி வைத்த சரித்திரக்குறிப்புக்களுடன் பிற சாதனச் செய்திகள் மாறுபடக் கூடுமாயின், அவற்றை ஆராய்ச்சி செய்வதே பெருங்குற்றமென்ற கொள்கை, சிலவாண்டுகட்கு முன் நம்மவரால் ஆதரிக்கப்பட்ட வளவு இப்போதில்லையென்றே சொல்லலாம். அத்தகைய கொள்கையை ஆதிமுதலே அநாதரித்து வருபவருள் யானும் ஒருவனென்பது பலரும் அறிவர். இப்போதும் அம்முறையில் நின்றே ஆழ்வார்களைப் பற்றி நீண்ட