பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை


(முதற்பதிப்பு)

மதுரைமாநகரில் 1926 ௵ பிப்ரவரி மீ', மதுரைத் தமிழ் சங்கத்தாரும் 'ஒய். யெம். ஸி. ஏ. சங்கத்தாரும் சேர்ந்து நடத்திவந்த உபந் நியாசத் தொடர்களிலே- மதுரைப் பிரபல
வக்கீல் ஸ்ரீமாந் : எஸ், சேஷ ஐயங்கார் அவர்கள், தலைமையின்கீழ் ஆழ்வார்கள் காலநிலை என்ற விஷயம் என்னால் உபந்நியாசிக்கப் பெற்றது. அப்போது யான் கூ'றியவை அச்சில் வெளி வருவதை அன்பர் பலரும் விரும்பினமையின், மயிலாப்பூர்த் தமிழர் கல்விச் சங்கத்தில் நடை பெறும் தமிழர் நேசன் பத்திரிகையில் முறையே அவற்றை எழுதி வெளியிட்டு வரலானேன். அவ்வுபந்நியாசப் பிரதி பெறவிரும்பிப் பலரும் அடுத்தடுத்து எனக்கு எழுதிவருகின்ற மையால் புதிய திருத்தங்களும் கீழ்க்குறிப்புக் களுமிட்டுக் குலசேகரப் பெருமாள் சரிதம் முடியவுள்ள பாகத்தை ஆழ்வார்கள் காலநிலை யின் முதற் பகுதியாக இப்போது வெளியிடு கின்றேன். இந்நூலைத் "தமிழர் கல்விச் சங்கம்" பிரசுரங்களுள் ஒன்றாகக் கொண்டு அச்சுக் குரியவற்றை யெல்லாம் அன்புடன் செய்து உதவியவர் -க்ஷ அக்கல்விச் சங்கத்தின் காரியதரிசியும் சென்னை அட்வொங்கட்டு சளுள் ஒருவருமான நண்பர்; ஸ்ரீமான் பி. என். அப்புஸாமி ஐயரவர்கள் பி. ஏ., பி. எல். இவர்கள் பேருதவி என்னால் என்றும் மறக்கற்பால தன்று. இந்நூலில் இரண்டாம் பகுதியையும் ஞான பரிபூர்ணர்களான ஆழ்வார்கள் திரு< வருளை முன்னிட்டு விரைந்து முடிக்கக் கருதி யுள்ளேன்.

திருவல்லிக்கேணி,

13-2-1929

இங்கனம்,
3 மு. இராகவையங்கார்,