பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30)

ஆழ்வார்கள் காலநிலை காலமாக ஆராய்ந்துவந்த என் முடிபுகளை ஒரு தொகுதி யாக இப்போது நான் வெளியிடப்புகுகின்றேன், எனது ஆய்வு இவ் உபந்நியாசம், இதுகாறுங் கிடைத்துள்ள சாதனங்களை யெல்லாந் திரட்டிக்கொண்டு ஒருசார்பு மின்றிச் சரித்திரகாரனொருவன் செய்யும் ஆராய்ச்சி - போன்றதேயன்றி, சம்பிரதாயமுறையுள் நின்று கூறு வதன்று. வைஷ்ணவசம்பிரதாயிகள் அல்லாதபிறரும் சாஸனவாராய்ச்சிவல்லாரும் ஆழ்வார்கள் சம்பந்தமாகக் கூறும் சரித்திரகாலக் குறிப்புக்களை நன்குசோதித்து, அறிஞர்கள் ஒப்பக்கூடிய முறையில் உண்மைகளை ஆராய்ந்து வெளியிடவேண்டும் என்பதே எனது முயற்சியாகும். அதனால், ஆழ்வார்திருவாக்குக்களால் அவர்கால நிலைகளாகத் தெரியவருபவை யாவை? வேறு நூல்களும் சாஸனங்களும் அவற்றுக்கு எவ்வளவில் துணையா கின்றன?--என்பனவே நான் விவரிக்கவிரும்பும் விஷயங் களாம். முதலாவதாக நான் இங்கே கூறுதற்குரியதுகலியுகத்தொடக்கத்தின் முன்னும்பின்னும் ஆழ்வார்கள் அவதரித்தவர்கள் என்பதற்குப் பழைய நூற்பிரமாணம் இல்லையென்பதேயாம். மேலே கூ.றியபடி திவ்யசூரி சரிதம், பின்பழகிய பெருமாள்சீயர் குருபரம்பரை என்ற பழைய நூல்களிரண்டினும் ஆழ்வார்கட்கு மாதங்களும் நக்ஷத்திரங்களுமன்றி வேறு கூறப்படவில்லை. அதனால் நம்மாழ்வார்க்குமட்டும் அந்நூல்கள் கூறும் ஏனைப் பஞ்சாங்ககாலங்கள் இடைச்செருகல் என்றே கொள்ளற்