பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை 33 வரங்கத்தமுதனார், தம் இராமாநுச நூற்றந்தாதியில் மேற்கண்ட குருபரம்பரையாசிரியர் கூற்றுக்குச் சிறிது மாறாக ஆழ்வார்கள் அவதாரமுறையை அமைத்துளார். இவற்றினின்று, ஆழ்வார்கள் அவதாரக்கிரமம் பற்றிப் பூர்வாசாரியர்கள் ஒருபடியான கருத்துடைய ரல்ல ரென்பது தெரியலாம். இனி, திவ்யசூரி சரிதங்கூறும் முறைவைப்பு, மேற் கூறிய வெண்பாவுக்குப் பெரிதும் ஒத்ததேயாயினும் அதனுட்கண்ட ஆழ்வார் வரலாறுகள் பல அமிசங் களில் மற்றக் குருபரம்பரைகளினும் வேறு பட்டன வாகும். திருமாலடியார்கள் பன்னிருவரையும் ஒரு காலத் தவர்களாகவே அந்நூல் கூறிச் செல்கின்றது. நம் மாழ்வாரைப் பிரதானராகக்கொண்டு அவர் திருமுன்பு எல்லா ஆழ்வார்களும் குழுமித் தத்தம் திவ்யப்பிரபந் தங்களைப் பாடி ஆனந்தித்து அளவளாவிய செய்தியை அச்சரித நூலுட் காணலாம், - பெரியாழ்வார் தம் 1. இராமாநுச நூற்றந்தாதி, 8-முதல் 19-வரையுள்ள பாசுரங்களில் முதலாழ்வார் மூவர், திருப்பாணாழ்வார், திருமழிசையார், தொண்டரடிப்பொடிகள், குலசேகரப் பெருமாள், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை மன்னன், நம்மாழ்வார், மதுரகவிகள் என்ற முறைவைப்புக் கூறப்படுதல் காண்க. 2 வடமொழியிலமைந்த இக்காவியம், எட்டயபுரம் ஸம்ஸ்தான வித்வான் ஸ்ரீ. உ. வே. திரு. வீ. சாமி ஐயங்கார் ஸ்வாமியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, மதுரை ஹரிசமயதி வாகர பத்திராதிபரால் அப்பத்திரிகைப்பிரசுர மாக வெளியிடப்பட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பின் 12-ம் அத்தியாயத்து 91, 92-ம் பக்கங்களில் மேற்கூறிய வரலாறு களைக் கண்டுகொள்க.