பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை 35 ஏனையாழ்வார்கட்கு மற்றக் குருபரம்பரைகள் கூறும் வெவ்வேறு பஞ்சாங்க காலக் குறிப்புக்களை இவரது ஆறாயிரப்படி நூலிற் காணாமையாலும், திவ்ய சூரிசரிதத்தை இவர் பிரமாணமாக எடுத்தாளுதலாலும் மேற் கூறிய கருத்து வலியுறுகின்றது. ஆதலால், ஆழ்வார்கள் அவதாரக் கிரமம், மேற் கூறிய வரவர முனிகளின் வெண்பாவின்படி அமைதல் பொருந்து மென்பதும், அவர்களிற் பெரும் பாலாரும் ஒரு நூற்றாண்டுக்குள் முன்பின்னாக அவதரித்துச் சமகாலத் தவராக விளங்கியவர் என்பதும் மேற் கூறிய பழைய சரித்திர நூல்களிரண்டையுங் கொண்டு நாம் தெரிந்து கொள்ளலாம். எனது ஆய்வு வழிகள் பின்னெழுந்த குருபரம்பரைகளில் ஆழ்வார்கள் அவதார காலங்களாகக் குறிப்பிடப் பெற்ற பஞ்சாங்க காலக் குறிப்புக்களுக்கு இன்னது பிரமாணம் என்பது தெரியவிடமில்லாமையால், அவற்றைச் சிறந்த கருவி களாகக்கொண்டு அறிஞர் சிலர் கணித்து வெளியிட் டுள்ள வெவ்வேறான காலவரையறைகளை இவ்வாராய்ச் சிக்கு விசேடமாகத் தழுவிக்கொள்ளக் கூடவில்லை. அவற்றிற் சில, ஆழ்வார் திருவாக்கால் அறியப்படும் சரித்திரச் செய்திகட்கு இயையாதனவாகவும் உள்ளன. ஆதலால், ஆழ்வார்கள் விஷயமாக யான் கூறுவன வற்றுக்கெல்லாம் திவ்யசூரிசரிதமும், பின்பழகிய பெருமாள் சீயர் குருபரம்பரையுமே ஆதாரங்களாவன என்பதும், அவையும் ஆழ்வார்களால் நேரே கூறப் படும் பாசுரங்கட்கு இயையாதன வாயின், அத்திருவாக் குக்களே பெரும் பிரமாணங்களாகக் கொள்ளப்படும் என்பதும் அறியத்தக்கன.