பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 ஆழ்வார்கள் காலநிலை ஆழ்வார்கள் சரித்திரங்களாக வழங்குவன யாவரும் நன்கறிந்தவையாதலால், அவற்றை விரிக்க வேண்டிய தில்லை. ஆதலின், ஆராய்ச்சிக்குரியவளவில் சுருங்கவே கூறி, ஆழ்வார்கள் திருவாக்கால் அறியக்கிடக்கும் சரித்திரப் பகுதிகளையும் அவர்கள் கால நிலையையும் இனி விளக்க முயல்வேன். இரண்டாம் அதிகாரம் முதலாழ்வார் மூவர் பொய்கையாழ்வார் பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற மூவரும் முதலாழ்வார்கள் என்றழைக்கப்படுவர். இவர்கள் அயோநிஜர்களாய் ஒரே மாதத்தில் அடுத்தடுத்த நக்ஷத்திரங்களில் அவதரித்தவர்கள் என்பதும், தனித் தனியே நாட்டில் சஞ்சரித்து வந்த இவர்கள் திருக்கோவ லூரிலே ஒரு வீட்டின் ஒடுக்கமான இடைகழியில் மழை பெய்த ஒரு நாளிரவு நெருங்கித்தங்க நேர்ந்தபோது, திருமால் இவர்கட்கு அருள்புரிய விரும்பி இவர்கட் கிடையில் நான்காமவராக இருந்து இருளில் மிகுதியாக நெருக்கினரென்பதும், அவ்வாறு துன்புறுத்துபவர் யாவர் என்பதனை அறிதற்கு வேறு விளக்கின்மையால் தங்கள் ஞானமாகிய விளக்கேற்றிப்பாட, அப்பெருமான் அங்கு அவர்கட்குக் காட்சி கொடுத்தனர் என்பதும் பிரபலமான சரிதங்களாகும்.