பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 முதலாழ்வார் மூவர் இவர்களுள் பொய்கையார் காஞ்சியிலும், பூதத்தார் திருக்கடன்மல்லையிலும், பேயார் மயிலாப்பூரிலும் அவதரித்தவர்களென்றும், இவர்கள் மூவரும் திருவல்லிக் கேணியில் யோகத்தில் எழுந்தருளியிருந்த திருமழிசை யாழ்வாரைச் சந்தித்து அளவளாவினரென்றும் குரு பரம்பரைகள் யாவும் கூறும். 27-வருஷங்கட்கு முன்பு பொய்கையார் என்ற தலைப்பெயரிட்டுச் செந்தமிழில் நீண்ட. வியாச மொன்று எழுதியுள்ளேன்.' அதனில், யான் கூறிய முடிவின் சுருக்கம் அடியில் வருமாறு: யாப்பருங்கல விருத்தி என்ற பழைய உரை நூலில் பொய்கையார் பாட்டு” என்ற குறிப்புடன் சில வெண்பாக்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இவ்வெண்பாக்கள் சில திரையர் முதலிய அரசரைப் பற்றியும் புகழ்வன, இப்பொய்கையாரை-"சாவவுங் கெடவும் பாடவல்லவரும், முக்காலமுமுணர்ந்தவரு மாகிய இருடி” என்று அவ்விருத்திகாரர் எழுது கின்றனர். ஆரிடச் செய்யுள்கட்கு அவ்விருத்தி காட்டிய உதாரணங்களுள், பொய்கை வாக்கு என்று குறிப்பிடப்பெற்ற இரண்டு வெண்பாக்கள், பொய்கை யாழ்வார் அருளிய முதற்றிருவந்தாதியில் உள்ளன. இதனால் இருடியாகிய பொய்கையாரும், ஆழ்வாரகிய பொய்கையாரும் களவழிபாடிய பொய்கையாரும் ஒருவரேயாதல் வேண்டும் என்றும், இவர்கள் வெவ்வேறானவர் என்பது, 11-ம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலவர்கள் கொண்ட கருத்தன்றென்றும் தெரிகின்றன.. என்பதே. 1. செந்தமிழ். தொகுதி-1, பகுதி-6.