பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 ஆழ்வார்கள் காலநிலை இவ்வாறு பல வருஷங்கட்கு முன்பு பொய்கையாழ் வாரைப்பற்றி எழுதப்பட்ட. என் முடிவைச் சரித்திர வறிஞர் சிலா முழுதுந் தழுவிக் கொண்டனர்.1 ஆனால் வேறு சிலர் இதனை ஏற்றுக்கொள்ள வில்லை. இவர்கள் ஆசங்கையெல்லாம், சங்ககாலத்தவ ரான பொய்கையார் உலகப்பிரவிருத்தியுடையவ ராகவும் அரசர்க்கு நண்பராய் அவர்களைப் பாடியவ ராகவும் தெரிதலின், நாக்கொண்டு மானிடம்பாடாத வரும் யோகியுமான பொய்கையாழ்வாராக அவர் ஒரு போதும் ஆகார்-என்பதேயாம். இவ்வாக்ஷேபம் என்கூற்றைப் பற்றிய தன்றிப் பழையதோர் உரைகாரர் கொள்கையைப் பற்றிய தென்பது இங்கு அறியத்தக்கது. யாப்பருங்கலவிருத்தி யுடையார் எழுதியவை உண்மைக்கு மாறுபடுமாயின், அதுபற்றி எனக்கு அதிகக் கவலையில்லை. ஆனால் பழைய பெரிய உரைகாரரொருவரது கூற்று அக் காலத்துப் பிரபல வழக்கொன்றைப்பற்றியே அமைந் திருக்க வேண்டுமென்றும், அதனை அவ்வளவு எளியதாக ஒதுக்கி விடுவது ஏற்கத் தகாததென்றும் நான் வற்புறுத்துவேன். முன்னோரான அவர் கூற்றுத் தக்க காரணமின்றியே தள்ளுதற்குரியதாயின், வேறு எதுதான் கொள்ளுதற்குரியதாகும்? 1, (தென்னிந்திய வைஷ்ண வசரிதம்' (Early History of Vaishnavism in South India) என்ற தம் நூலில் (பக் 67--73) டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்காரவர்கள் முதலியோர் இக்கொள்கை கொண்டெழுதி யிருத்தல் காண்க. 2. தஞ்சை : ரால்பகதூர்: K. S. ஸ்ரீநிவாசபிள்ளை யவர்கள் முதலியோர் (தமிழ்வரலாறு, பக், 176-7)