பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதலாழ்வார் மூவர் 39 அவ் யாப்பருங்கல விருத்தியுடையாரோ 11-ம் நூற்றாண்டின் முற்பகுதியினர் ஆவர். பிற்பட்ட வீர சோழிய வுரைகாரர் தண்டியலங்காரமுடையார் இவர்கள் போல, வீரராசேந்திரன், முதற்குலோத்துங்கன் முதலிய பிரபல சோழர்களைப்பற்றிய பாடலொன்றையும் அவர் தம்முரையுள் ஆளாமையே இதற்குப் போதிய சான்றாம். ஆகவே அவரெழுத்துக்கள் யாவும் குருபரம்பரைகள் எழுதப்பட்டதற்கு முன்பே வழங்கிய தமிழ்நாட்டுப் பழஞ் செய்திகளாதலால் சரித்திரவாராய்ச் சிக்கு அவை சிறந்த சாதனங்களென்று கொள்ளத் தடையில்லை என்க, இனி, அவ்விருத்திகாரர் ஆரிட.மான கவிகட்கு உதாரணங்காட்டி வருமிடத்தே-"அவை உலகியற் செய்யுட் கோதிய உறுப்புக்களின் மிக்குங் குறைந்தும் வரும்” என்றும், அவ்வரரிடம் பாடுதற்குரியார்“ஆக்குதற்குங் கெடுத்தற்கும் ஆற்றலுடையோராய் முக்காலமும் உணர்ந்த இருடிகள் என்றும், அவராவார் --பொய்கையார், குட மூக்கிற்பகவர், பூதத்தார், காரைக் காற்பேயார், மூலர் முதலியோர் என்றும் எழுதி, அவ்வாறு மிக்குங்குறைந்துமுள்ள அவர் பாடல்களை மேற்கோள்காட்டிச் செல்கின்றனர். ஈண்டுக் குறிக்கப்பட்ட ஆரிடக் கவிகளெல்லாம், யோகிகளான முதலாழ்வார்களுள்ளும் நாயன்மார் களுள்ளும் சேர்ந்த அடியார்களாக விளங்குதல் குறிப் பிடத்தக்கதாம், இவற்றுட் பொய்கையார் பாடிய ஆரிடச்செய்யுள்:-- 1. செந்தமிழ், 24-ம் தொகுதியுள் அமிதசாகரர்' என்ற தலைப்பெயரின் கீழ் யான் எழுதிய ஆராய்ச்சியுள், இவ்விருத்தி காரரைப் பற்றியுங் குறிப்பிட்டுள்ளேன்.